சிறுக சிறுக 46 பவுன் தங்க நகைகள்.. விழுப்புரத்தில் 2வது திருமணம் செய்ய போன பெண்ணுக்கு வந்த பரிதாபம்
விழுப்புரம்: தங்க நகைகள், நிலம், பணத்துக்காக, இளம்பெண்களிடம் நெருங்கி பழகி மோசடி செய்யும் நபர்கள் பெருகி வருகிறார்கள்.. இந்த மோசடியை எளிதாகவும், சந்தேகம் வராதபடி செய்வதற்காகவும், மோசடிக்காரர்கள் தேர்ந்தெடுப்பது மேட்ரிமோனியலைதான்.. சமீபகாலமாகவே திருமண மோசடிகள் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு ஆண், பெண் இரு தரப்பினருமே விலக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இப்போதும் ஒரு அதிர்ச்சி சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.
திருமண புரோக்கர்களாக செயல்படும் சிலபெண்கள், நகை, பணத்தை மோசடி செய்து கைதாவது பெருகி கொண்டிருக்கிறது.. அதேபோல திருமணம் செய்ய காத்திருக்கும் இளம் பெண்களை குறி வைத்து, சில ஆண்கள் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில்கூட சென்னை சூளைமேட்டில் நர்ஸ் ஒருவரை, சூர்யா என்ற இளைஞர்.. , மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு நெருங்கி பழகியிருக்கிறார்.
தங்கத்தில் புரண்ட சூர்யா
திருமணம் செய்வதாக சொல்லி நர்ஸிடம் நெருக்கமாகவும் இருந்துள்ளார்.. திருமணத்துக்கு பிறகு சொந்த வீட்டில்தான் நாம் வாழ வேண்டும் என்று கூறி நர்ஸிடமிருந்து லட்சக்கணக்கில் பணம், நகைகளை மோசடி செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.
பிறகு நர்ஸ் தந்த புகாரின்பேரில் போலீசார் நெல்லையை சேர்ந்த சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இந்த சூர்யா 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்திருப்பதும் அம்பலமானது. பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்காகவே சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார் இந்த சூர்யா. இத்தனைக்கும் இவர் சூர்யாவின் அப்பா, மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்!!!
விழுப்புரம் நகை மோசடி
சூர்யாவை விவகாரம் போல மேட்ரிமோனியல் மோசடியில் பலர் கைதாகி வந்தாலும்கூட, சிலர் விழிப்புடன் இருப்பதில்லை.. விழுப்புரத்திலும் மேட்ரிமோனி மோசடி நடந்துள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜா அகமது.. இவரது மகள் ஷகீலா பானுவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.. ஆனால், இவரைவிட்டு கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், தனியாக வசித்து வருகிறார்.. எனவே தன்னுடைய 33 வயது ஷகிலாபானுவுக்கு தமிழ் மேட்ரிமோனி மூலம் 2வது திருமணத்துக்காக வரன் தேடி வந்தார் ராஜா அகமது.
சிறுக சிறுக 46 சவரன் தங்க நகைகள்
அப்போதுதான், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த ரகமதுல்லா (35) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.. கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் ஷகிலா பானுவுடன் பழகி வந்த ரகமதுல்லா, ஷகிலா பானுவை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே முதல் திருமணத்தால் மனம் நொந்து போயிருந்த ஷகிலா பானு, ரகமதுல்லாவின் ஆறுதல் வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டு, அதிக நம்பிக்கையும் வைத்தார். ஆனால், ரகமதுல்லா ஏதேதோ காரணங்களை கூறி ஷகிலா பானுவிடமிருந்து நகைகளை வாங்க ஆரம்பித்தார்.. சிறுக, சிறுக 46 சவரன் நகையை ஷகிலா பானுவிடமிருந்து அபகரித்துவிட்டார் ரகமதுல்லா.
தலைமறைவான மாப்பிள்ளை
பிறகு ஒருகட்டத்தில் ஷகிலா பானுவிடம் பேசுவதையே ரகமத்துல்லா நிறுத்திவிட்டார்.. இதனால் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த ஷகிலாபானு, ரகமதுல்லாவுக்கு போன் செய்தால், செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. இதனால் மேலும் பதறிப்போன ஷகீலா பானு, ரகமதுல்லா குறித்து விசாரித்தபோது, அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த ஷகிலா பானு, விழுப்புரம் நகர போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications