ஸ்பீக்கர் பாக்ஸில் 2 வயது சிறுவனின் சடலம்! விபரீதமாக மாறிய விளையாட்டு.. கலங்கிய கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், 3 நாட்கள் கழித்து வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தலில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பாலப்பந்தல் கிராமத்தின் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி. கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. செய்வது கூலி வேலையாக இருந்தாலும், குழந்தை, மனைவி, குடும்பம் என திருமூர்த்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதியன்று இவரது மகன் 2 சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அதன் பின்னர் சிறுவனை காணவில்லை. அக்கம் பக்கம் வீடுகளில் தேடி பார்த்தும் சிறுவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் பதறிய திருமூர்த்தி உடனடியாக திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினரும் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனாலும் சிறுவன் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
இதனையடுத்து திருப்பாலப்பந்தல் அருகே உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் சிறுவனின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக சிறுவன் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், திருமூர்த்தியின் வீட்டிலிருந்த ஸ்பீக்கர் பாக்கஸில் துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகத்தின் பேரி அதனை திறந்து பார்த்த திருமூர்த்தி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது காணாமல் போன சிறுவன் இந்த ஸ்பீக்கர் பாக்ஸில் சடமலாக அழுகிய நிலையில் இருந்திருக்கிறார்.
இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறுவனின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல சிறுவன் எப்படி இந்த பாக்ஸில் சிக்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும்போது எதிர்பாராத விதமாக இங்கு சிக்கிக்கொண்டாரா? அல்லது வேறு யாராவது இதில் அடைத்து வைத்தார்களா? திட்டமிட்ட கொலையா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனின் சித்தாப்பாவை பிடித்து காவல்துறை விசாரித்து வருகிறது. காணாமல் போன சிறுவன் 3 நாட்கள் கழித்து சிறுவன் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications