மரக்காணத்தில் திகில்.. வெள்ளை நிறத்தில் சாலையில் ஹாயாக வாக்கிங் செல்லும் ஒரு உருவம்.. வைரல் வீடியோ
விழுப்புரம்: மரக்காணத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் நடந்து செல்வதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
அமானுஷ்ய சக்திகள் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்கள் பேயாக உலா வருவதாகவும், அவர்கள் மற்றொருவரின் உடலில் புகுந்து தொந்தரவு கொடுப்பதாகவும் வைரல் வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
திகிலூட்டும் ஹாலிவுட் ஹார்ரர் திரைப்படங்கள் அமானுஷ்ய கட்டுக்கதைகளை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எனினும், பேய் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு என்றும் விடை கிடைத்ததில்லை.

விஞ்ஞானம்
அமானுஷ்யம் என்ற ஒன்று இல்லை என விஞ்ஞானம் கூறும் போதிலும் எங்கோ ஓரிடத்தில் கண்ணிற்கு புலப்படாத சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அவை செய்திகளாக வெளியாகி வருகின்றன. அதேபோன்ற ஒரு சம்பவம் தான் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

காட்டு பகுதி
மரக்காணத்தில் இருந்து தீர்த்தவாரி கடற்கரை பகுதிக்கு செல்லும் வழியில் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது. இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சிலர், வெள்ளை நிற உடையில் அமானுஷ்ய உருவம் ஒன்று நடந்து செல்வதை பார்த்துள்ளனர். அவர் அந்த உருவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

வீடியோ
30 விநாடிகள் வரை எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் வெள்ளை உருவம் நடந்து செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மரக்காணம் பகுதி மக்கள் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக அச்சம் தெரிவித்து வருகின்றனர். பேய் உலவுவதாக பகிரப்படும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

பிராங்க் வீடியோ?
இது வைரலாக்கவே எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். இன்னும் சிலர் ஆமாம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்கிறார்கள். இன்னும் சிலர் ஈசிஆர் சாலைகளிலும் கூட ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரு சக்கர வாகனம், கார்களை அச்சுறுத்தும் வகையில் அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றன என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications