உதவியாளர் நம்பர் வேண்டாம்.. உங்க நம்பரைக் கொடுங்க.. கள்ளக்குறிச்சி எம்பியை திடுக்கிட வைத்த பெண்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது 4 சென்ட் நிலத்தைத் தனிநபர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறி, தலைமைச் செயலகம் முதல் டிஜிபி அலுவலகம் வரை கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்த கள்ளக்குறிச்சி எம்பி மலையரசனை சந்தித்து, தன் குறையைக் கூறினார். ​உடனே எம்பி, டிஆர்ஓ உதவியாளரிடம் இவரை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

ஆனால், திடீரென ஓடிவந்த செல்வி, உங்க உதவியாளர் நம்பர் வேண்டாம், உங்க சொந்த நம்பரைக் கொடுங்க எனக்கேட்டு வாங்கியதோடு, இருங்க சார், கால் வருதான்னு பாக்குறேன் எனச்சொல்லி, ஸ்பாட்டிலேயே எம்பிக்கு போன் போட்டு செக் செய்தார்.

A woman who cleverly obtained the mobile phone number of Kallakurichi MP Malaiyarasan

​இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் திகைத்துப்போக, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்தப் பெண்ணை சாதுரியமாக அப்புறப்படுத்தினர். எம்பியிடம் பெண்மணி செய்த இந்தச் சம்பவம், அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மின் - தேசிய வேளாண் சந்தை, வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம், பயறு வகை பயிர்களின் தன்னிறைவுக்கான இயக்கம், மண் வள அட்டை, பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா, பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசன திட்டம், தேசிய நலக் குழுமம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கல்வி உதவித் தொகை, சமக்ர சிக்ஷா திட்டம், திறன் வளர்ப்பு பயிற்சி, தேசிய கால்நடை இயக்கம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, கேலோ இந்தியா, ஒருங்கிணைந்த சேவை மையம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம், வங்கிக் கடன்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், தேசிய பால் வள மேம்பாட்டுத் திட்டம், தபால் துறை திட்டங்கள், தாட்கோ திட்டங்கள் குறித்தும் ஆய்வு நடந்தது.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மலையரசன் எம்.பி. பேசுகையில், அரசின் திட்டப் பணிகளில் நிலுவையிலுள்ள திட்டங்களில் அரசின் திட்டத் தொகைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சுகாதாரத் துறை தொடர்பானத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் புதிய திட்ட பணிகளுக்கான கருத்துருக்களை துறை வாரியாக விரைவாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் குறித்து பயனாளிகள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் தொடர்புடைய துறை அலுவலர்கள் தொடர்ந்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+