அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்
நடிகர் அஜீத் பேனர் சரிந்து விழுந்ததில் 6 ரசிகர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம்: நடிகர் அஜீத்தின் 60 அடி உயர கட் அவுட்டின் மேல் உட்கார்ந்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென கட் அவுட் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது.
இதனால் நடிகர் அஜீத்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள்.

மாலைகள்
இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். எப்போதுமே அஜீத் படம் வெளியானால் அவரது ரசிகர்கள் கட்அவுட்டுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து, சூடம் காட்டுவார்கள்.

60 அடி உயரம்
அப்படித்தான் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் விஸ்வாசம் படத்தை வரவேற்கும் விதமாக 60 அடி உயரத்துக்கு அஜீத்தின் உருவ கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.
பாலாபிஷேகம்
இதற்கு பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் பலர் கூடினர். அதில் ஒருசிலர் கட் அவுட் மீது ஏறி மாலை அணிவித்தனர். பிறகு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது, மேலும் சில ரசிகர்களும் அதே கட் அவுட்டில் ஏற ஆரம்பித்தார்கள். அப்போது இதனால் பாரம் தாங்காமல் அஜீத் கட் அவுட் அப்படியே சரிந்து விழுந்தது.

6 பேர் படுகாயம்
அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கட் அவுட் சரிய சரிய ஒவ்வொருவராக கீழே குதிக்க ஆரம்பித்தார்கள். இதனால் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications