என் வித்யாவை போல் பாதிப்பை ஏற்படுத்தியது அனிதாவின் மரணம்! இந்த நீட் எதுக்கு? விஜய் ஆக்ரோஷம்
விக்கிரவாண்டி: எனது தங்கை வித்யா இறந்த போது எனக்கு எப்படி இருந்ததே அதே மாதிரியான பாதிப்புதான் தங்கை அனிதா நீட் தேர்வால் இறந்த போது இருந்தது என நடிகர் விஜய் உணர்ச்சிப்பொங்க பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதாவது: அறிவியல், தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக் கூடாதா? அரசியல்வாதிகளை இகழ்ந்து பேச மாட்டேன்; அதுக்காக கண்மூடியும் இருக்க மாட்டேன்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு" யாரின் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் நாங்கள் அல்ல. பெரியார் தான் கொள்கை தலைவர். ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுக்கப் போவதில்லை.
பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெகவின் எதிரி. நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும். பத்தோடு பதினொன்றாக, மாற்றுக் கட்சி என சொல்லிக் கொண்டு Extra luggauge ஆக வரவில்லை; ஒரு முடிவோட தான்
வந்திருக்கிறேன் இனி No looking back.
மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறி ஏமாற்றுகிறார்கள். அண்ணா, பெரியார் உள்ளிட்டோரின் பெயரை சொல்லி குடும்ப அரசியல் செய்து ஊழலில் ஈடுபடும் கட்சிதான் அரசியல் எதிரி. ஆவுன்னா ஏ டீம் பி டீம் என சொல்கிறார்கள். இவர்களாகவே ஏதாவது ஒரு நிறத்தை பூசுகிறார்கள்.
இந்த நிறத்தை தவிர எங்கள் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது. என் தங்கை வித்யா இறந்த போது என் மனம் எப்படி பாதிக்கப்பட்டதோ, அதே போல்தான் தங்கை அனிதா இறந்த போது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. திறமை இருந்தும் இந்த நீட் தேர்வால் அந்த சகோதரி தனது உயிரை இழந்தார். நீட் தேர்வை நீக்க வேண்டும் என விஜய் உணர்ச்சிப் பொங்க தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு விஜய் வந்தார். அவர் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றினார்.
பிறகு 800 மீட்டருக்கு போடப்பட்டுள்ள ரேம்பில் விஜய் தொண்டர்களுக்கு கையசைத்தார். அப்போது அவர் மீது வீசப்பட்ட தவெக கட்சி துண்டுகளை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டார். பிறகு அதில் சிலவற்றை தொண்டர்களை நோக்கி வீசினார்.
இந்த கூட்டத்தில் கொள்கை விளக்க பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையே இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் விஜய் பேசத் தொடங்கினார். அதற்கு முன்னர், தனது தாய், தந்தை ஆகியோரிடம் ஆசியை பெற்றார். நடிகர் ஸ்ரீமன், சவுந்திரராஜன், தாடி பாலாஜி உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றார்.












Click it and Unblock the Notifications