பைக், டூவீலர் இருக்கா? புருஷன் இருந்தால் ரூ.1000 உரிமைத் தொகை கிடையாது..மகளிரை பதற வைத்த நடிகை நமீதா
விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் இருக்கும் வீடுகளுக்கு 1000 ரூபாய் கிடைக்காது, பைக் இருக்கும் வீடுகளுக்கு 1000 ரூபாய் கிடைக்காது என்று திமுகவின் மகளிர் உரிமைத்திட்டத்தை பாஜக பிரமுகரும், நடிகையுமான நமீதா விமர்சித்திருக்கிறார்.
தமிழக பாஜகவில் ஐக்கியமாகி உள்ளவர் பிரபல நடிகை நமீதா.. இவர் பாஜகவில் அன்று சேர்ந்ததுமே, தமிழக மக்கள் அதிர்ந்துதான் போனார்கள்.. பாஜகவில் நமீதா என்ன செய்ய போகிறார்? தமிழக கிராமங்களில் பிரச்சாரத்திற்கு போனாலும் என்ன பேச போகிறார்? என்ற ஆர்வமும் ஒட்டிக்கொண்டது.

தாமரை மலரும்: "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வார்த்தையைகூட, நமீதாவால் சரியாக உச்சரிக்க முடியாத வீடியோக்களும் இணையத்தில் அப்போது மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. அதற்கு பிறகு, பாஜக நிகழ்ச்சிகளில் நமீதாவை அவ்வளவாக காண முடியாத நிலையில், சமீபகாலமாகத்தான் அக்கட்சியின் கூட்டங்களில் தென்பட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் நமீதாவிடம், "பெண்களை பல்வேறு துறைகளில் ஊக்கப்படுத்துவதற்கு, பாஜக செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் இதுவரை என்னென்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்" என்று கேட்டார்கள்..
பெண்கள்: அதற்கு நமீதா, "என்னுடைய வீட்டில் வேலை செய்றவங்க எல்லாரும் பெண்கள்தான்.. அதில் 2 பெண்களுக்கு 22, 23 வயதாகிறது.. அவர்களுக்கு நான்தான் கல்யாணம் செய்துவைக்க போகிறேன். இப்படி என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நான் உதவி செய்து வருகிறேன்" என்று கூறியிருந்தார். அத்துடன், கட்சியின் எந்த விழாக்களுக்கு சென்றாலும், திமுகவை சரமாரியாக விமர்சித்தும் வருகிறார்.

"திமுக அரசால் டாஸ்மாக் மாநிலம் என பெயர் எடுக்கப் போகிறது, தமிழக அரசை டாஸ்மாக் அரசு என்று தான் சொல்ல வேண்டும்.. ஆனால், நமக்கு டாஸ்மாக்கும் வேணாம், திமுகவும் வேணாம் என்ற நமீதாவின் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகியிருந்தன. இந்நிலையில், இன்றைய தினம், விழுப்புரத்தில் நடந்துள்ள பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நடிகை நமீதா பங்கேற்று பேசியிருந்தார். அதன் சுருக்கம்தான் இது:
மகளிர் உரிமைத்தொகை: "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக, நம்முடைய அப்பாவி பெண்களுக்கு, நம்ம தமிழக மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை தந்தாங்க.. இப்போ ஏமாத்திட்டாங்க.. எல்லா பெண்களுக்கும் மாதத்துக்கு 1000 ரூபாய் தரப்போவதாக சொல்லி, இப்போவரைக்கும் 10 சதவீத பெண்களுக்குகூட 1000 ரூபாய் போய் சேல.. திமுகவிடம் இதுகுறித்து காரணம் கேட்டால், கார் இருக்கிற வீட்டிற்கு 1000 ரூபாய் கிடையாது, பைக் இருக்கிற வீட்டிற்கு 1000 ரூபாய் கிடையாது என்கிறார்கள்.
பைக் இல்லாத வீடு இப்ப எங்காவது இருக்கா? ஒரு வீடாவது பைக் இல்லாமல் இன்னைக்கு நம்மால் பார்க்க முடியாது. இன்னொரு மேட்டர் இப்ப புதுசா வந்திருக்கு.. புருஷன் இல்லாத வீடுகளுக்கு கூட, 1000 ரூபாய் கிடையாதாம்..
1000 ரூபாய்: வீடுகளில் சமையல் கேஸ் இருந்தாலும், 1000 ரூபாய் கிடையாதாம்.. ஆனால், நம்ம மோடிஜி, கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளுக்கு, ஏற்கனவே இலவசமாக தந்துவிட்டார். ஆனால், அவர்களுக்கும் இந்த 1000 ரூபாய் வரலயாம். இது தமிழக மக்களுக்கு செய்துள்ள பச்சை துரோகம்.

திமுகவின் இன்னொரு சுவாரஸ்யமான வாக்குறுதியை பாருங்க.. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டுவந்துள்ளார்களே.. இந்த திட்டமும் ஏமாற்றுதான்.. இதுவரை பெண்களுக்கு 10 ரூபாய், ஆண்களுக்கு ரூபாய் என 2 பேருக்கும் சேர்த்து 20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து பயணித்தோம். ஆனால், இப்போது பெண்களுக்கு இலவச பயணத்தை அறிவித்துவிட்டு, ஆண்களுக்கு 20 ரூபாய் என்று டிககெட் விலையை உயர்த்திவிட்டார்கள். இது நியாயமா?
ஆக்ரோஷம்: இந்த மாதிரி பெரிய லிஸ்ட் என் டைரியில் இருக்கு. இப்போ சொல்ல முடியாது. இதையெல்லாம் வைத்துதான் சொல்கிறேன், கண்டிப்பாக தாமரை தமிழ்நாட்டில மலரணும். அப்பதான் நம்ம தமிழக மக்களின் வாழ்க்கை நிம்மதியா, வசதியாகவும் இருக்கும்" என்று ஆக்ரோஷத்துடன் பேசிய நமீதா, "ஜெய்ஸ்ரீராம்" என்று முழக்கமிட்டபடி பேச்சை முடித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications