நாங்க போட்ட பிச்சை எம்பி சீட்.. அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி..! சின்னய்யா அப்படி என்ன சொன்னார்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: நாங்கள் மட்டும் 2019 பொதுத்தேர்தலில் கூட்டணியில் இல்லை என்றால், அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய நிலையில், மாநிலங்களவை எம்பி சீட் அன்புமணிக்கு அதிமுக போட்ட பிச்சை என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிச்சாமி பாமகவை விமர்சிக்க தகுதியே கிடையாது.

AIADMK Edappadi Palaniswami criticized PMK leader Anbumani Ramadoss

நாங்கள் மட்டும் 2019 பொதுத்தேர்தலில் கூட்டணியில் இல்லை என்றால், அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும்.. அதிமுகவை பொறுத்த வரையில் கூட்டணியில் இருந்தால் தியாகி… இல்லை என்றால் துரோகியா? அதிமுக நம்மை ஏமாற்றி விட்டார்கள். .

அன்புமணி ராமதாஸ்: தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்க இருந்த நேரத்தில் மதியம் 12 மணிக்கு ஜி.கே.மணியிடம் லிஸ்ட் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு அவசர அவசரமாக மதியம் 1 மணிக்கு சட்டத்தை கொண்டு வருகின்றனர். கடைசி நாளில் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது எனக் கூறியும், அரைகுறையாக உள்ளது எனவும் நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது. இது அதிமுக திட்டமிட்டு தான் செய்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பெரிய தியாகி போல் இதனை நான் தான் கொடுத்தேன் என்று கூறுகிறார்” என பேசியிருந்தார்.

இபிஎஸ் பதிலடி: இந்நிலையில் அன்புமணியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஜெ.பாக்யராஜை ஆதரித்து பேசிய அவர்," அதிமுகவுக்கு யார் யார் துரோகம் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நல்லதுசெய்தவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். துரோகம் செய்தவர்கள் வீழ்ந்து போயிருக்கின்றனர்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு: ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது அதிமுக. மதத்தால், மொழியால் மக்களைப் பிரிக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களின் அரணாக செயல்பட்டது அதிமுக ஆட்சிதான் என்பதை சிறுபான்மையின மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நிச்சயம் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் சிலர்.

பிச்சைதான் எம்பி பதவி: கூட்டணிக் கட்சிகளிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சியாக என்றும் இருந்திருக்கிறது அதிமுக. அதுபோன்று ஆட்சியிலும் ஒரே நிலைப்பாடு. அதிலிருந்து எப்போதும் மாறமாட்டோம்., ஆனால், நம்முடன் கூட்டணி வைத்தவர்கள் சந்தர்ப்பவாதத்தால் கூட்டணி மாறியிருக்கின்றனர். அன்புமணி ராமதாஸ் அய்யய்யோ பிச்சை போடுங்கள் என்று கூறுவார். அப்படி நாங்கள் போட்ட பிச்சைதான் எம்பி பதவி. அதிமுக ஆட்சியில் தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. ஆனால் பாஜக தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது என்று அறிவித்துள்ளனர்.

பாமகவின் நிலை என்ன?: கூட்டணியில் உள்ள பாமக கொள்கை என்ன?. ஆனால் அவர்கள் அதிமுகவை விமர்சிக்கிறார்கள். பிரதமர் மோடி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பாமகவின் நிலை என்ன?. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்வார்கள். சில பேர், சில காலத்தில் தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தேர்தலில் விடிவுகாலம் கிடைக்கும்” என பேசியுள்ளார். இது அதிமுக-பாமக இடையேயான மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+