Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தவேண்டாம்.. திமுக வென்றதாக அறிவித்துவிட்டு போகலாம்.. டென்ஷனான அன்புமணி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை. திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்தது. சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Vikravandi By Election By Election 2024 Anbumani ramadoss 2024

3 கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் செய்தியாளர்களிடம் பேசினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி பேசுகையில், "சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவர்கள் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த 10 நாளில் விழுப்புரத்தில் ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் அரசியல்வாதிகள், காவல்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்." என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் பேசிய அன்புமணி ராமதாஸ், "அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் விக்கிரவாண்டியில் சூழ்ந்து மக்களுக்கு பணத்தை இறைத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான திமுகவினர் விக்கிரவாண்டியில் எல்லா ஊர்களையும் ஆக்கிரமித்துள்ளனர். 2000 ரூபாய் பணம் கொடுக்கப்போகிறோம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி அழைக்கின்றனர்.

விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை. இது ஒரு தேர்தலா? இப்படித்தான் ஜெயிக்க வேண்டுமா? இதற்கு தேர்தலே தேவையில்லை. திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம். குழந்தைகளை கடத்தி வைத்து ஓட்டு போட்டால்தான் விடுவோம் என திமுகவினர் மிரட்டக்கூட செய்வார்கள். திருமங்கலம், ஈரோடை தொடர்ந்து இது விக்கிரவாண்டி ஃபார்முலா" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆனால், இத்தனையையும் மீறி நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு வளர்ச்சியும் இல்லை. ஜெயலலிதா புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்த கூடாதென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுக நிர்வாகிகளால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாமகவினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளனர்." எனக் குற்றம்சாட்டியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+