Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசம் உறுதி? ஸ்டாலினுக்கு தந்த வாக்குறுதி! அன்னியூர் சிவா ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ள திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, களத்தில் 9 அமைச்சர்கள் தேர்தல் பணிகளைச் செய்து வருவது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.

வரும் 10 ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. திமுகவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதால் அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளது. இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து பாமகவும் நாதகவும் களத்தில் உள்ளன. பாஜக கூட்டணியில் உள்ள பாமக நிற்கிறது. அடுத்து நாம் தமிழர் கட்சியும் போட்டிப் போடுகிறது.

Vikravandi By Election 2024 vikravandi bypoll Anniyur Siva 2024

பாமக ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் போட்டு வாக்கு கேட்டு வருகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு எதையும் சொல்லவில்லை. அன்புமணி ராமதாஸ், தங்களின் கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் உள்ளதாக ஜெயலலிதா படத்தைப் போட்டுள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார். நாதக போஸ்டரில் ஜெயலலிதா படம் போடவில்லை. ஆனாலும் வெளிப்படையாக அதிமுக, தேமுதிக தொண்டர்கள் ஒருமுறை வாக்களிக்க வேண்டும் என்றும் தான் அதிமுகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்துள்ளதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடா மிக வெளிப்படையாக நடந்து வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி வருகிறார். சீமானும் அமைச்சர் ஒருவரின் சார்பாக 20 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகப் பரப்புரையில் பேசி வருகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தான் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார். திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தனது பரப்புரையின் போது 1லட்சத்து 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டுவோம் என்று கூறியுள்ளார்.

இதனிடையே தேர்தல் களத்தில் உள்ள திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும் போது, “முதன் முதலாக நான் திமுகவுக்காக உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு 1984 தேர்தலில் ஜீப்பில் பிரச்சாரம் செய்தேன். 1986இல் அன்று இளைஞரணி செயலாளர் முன்பாக பொதுக்கூட்டத்தில் பேசினேன். அதன்பின்னர் 89 முதல் இளைஞரணியிலிருந்து வருகிறேன். பிறகு பொதுக்குழு உறுப்பினராக இருந்தேன். 2020இல் விவசாய அணி துணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டது. 2023இல் இருந்து மாநில விவசாயத் தொழிலாளர் அணி செயலாளராக இருந்து வருகிறேன். அப்போது எல்லாம் கிடைக்காத சந்தோசம் முதன்முறையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டிப் போடும் போது ஏற்பட்டுள்ளது.

என் பெயரை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் காலையில் 5 மணிக்கு எழுந்துவிடுகிறேன். 7 மணிக்கு எல்லாம் பிரச்சாரத்தைத் தொடங்கிவிடுகிறோம். தேர்தல் களத்தில் பல வேட்பாளர்கள் இருக்கின்றனர். நாங்கள் முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை சொல்லி வாக்குகளைக் கேட்டு வருகிறோம். இரவு 9:30 மணிவரை பிரச்சாரம் தொடரும். அதன்பிறகு அடுத்த நாள் என்ன என்பதை திட்டமிட்டு படுக்கைக்குச் செல்ல இரவு 1 மணி ஆகிவிடும்.

திமுக 2016 திமுகதான் வென்றது. ரதாமணி தான் எம்.எல்.ஏவாக இருந்தார். 2019இல் அவர் மறைந்துவிட்டார். அதன்பின்னர் அதிமுக வென்றது. மீண்டும் நடந்த தேர்தலில் புகழேந்தி வெற்றி பெற்றார். ஆக, திமுகதான் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறது. 3 வருடம் இவர்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். புகழேந்தி அண்ணன் எம்.எல்.ஏவாக இருக்கும்போதே தொகுதிக்குத் தேவையான பணிகளை அவருடன் இணைந்து செய்தவன் நான். கட்சியின் சாதாரண தொண்டன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார். புகழேந்தி முன்பே தொகுதிக்கான 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்துள்ளார். அதைத் தயாரிக்கும் போது உடன் இருந்தவன் நான். ஆகவே, தொகுதிக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன் நான்.

இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை பற்றி எல்லாம் மக்களுக்குக் கவலை இல்லை. அவர்கள் அடிப்படை வசதிகளைக் கேட்கிறார்கள். பள்ளிக்குக் கட்டிடம் வேண்டும், பேருந்து வசதி வேண்டும், நியாயவிலைக்கடை வேண்டும் இதுதான் மக்கள் கோரிக்கை. ஆகவே அதை ஒரு ஆளும் கட்சியாக திமுக அதைச் செய்து தரும் என மக்கள் நம்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் என்றால் ஆளும் கட்சியைக் குறைதான் சொல்வார்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.

ஒரு கட்சி போட்டியிடுகின்றது என்றால். அந்தக் கட்சியின் பலத்தை நம்பி நிற்க வேண்டும். ஆனால், அவர்கள் அதிமுக வாக்குகளைக் கேட்டு நிற்கிறார்கள். அதிலிருந்தே அந்தக் கட்சி எவ்வளவு பலமாக உள்ளது என்பதை மக்கள் பார்த்துப் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே, நாங்கள் பலமாக உள்ளோம். திமுக அமைச்சர்கள் எல்லாம் தொகுதியில்தான் இருக்கிறார்கள் என ஒரு விமர்சனத்தை வைக்கிறார்கள். அவர்களை எதிர்க்கட்சிகள் அமைச்சராகப் பார்க்கின்றன. நாங்கள் எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளாகப் பார்க்கிறோம். அவர்களை வைத்துத்தானே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் என்பதால் கட்சி வெற்றிக்குப் பாடுபடக்கூடாதா என்ன?

எங்களைக் குறைகூறும் எதிர்க்கட்சியினர் அவர்கள் கட்சியின் பிறமாவட்ட நிர்வாகிகளை விக்கிரவாண்டியில் கொண்டு வந்து இறக்கி உள்ளனர். அவர்கள் செய்யாததை நாங்கள் செய்யவில்லை? ஆகவே, எங்களைக் குறை சொல்லும் தகுதி அவர்களுக்கு இல்லை. எனக்கு இந்தத் தொகுதியைக் கொடுத்த போது முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெறச் சென்றேன். அப்போது முதல்வர், 'எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று' கேட்டார். நான் 'ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என்றேன். ஆகவே, எங்கள் இலக்கு ஒரு லட்சம்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+