Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரத்தில் பயங்கரம்... நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பைக்கில் சென்ற தந்தை, மகன் உடல் சிதறி பலி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : சின்ன கோட்டக்குப்பத்தில் நாட்டு வெடி வெடித்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பலியானார்கள். வாகனமும் சுக்குநூறாக சிதறியது. வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் இரு சக்கர வாகனத்தில் இருந்த வெடி குண்டு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கலைநேசன்(35), இவர் விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தில் பெண் எடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் விழுப்புரத்தில் வசித்து வந்துள்ளார். இவர் நாட்டு வெடிகுண்டுகளை புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வாங்கி வந்து விழுப்புரத்தில் விற்பதை தொழிலாக செய்து வந்துள்ளார்.

bike explose in Villupuram ... Father and son who went on a bike were killed when the country bomb exploded

வழக்கமாக தனது இருசக்கர வாகனத்தில் புதுவைக்குச் சென்று நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். இன்று தீபாவளி தினத்தில் வழக்கம் போல் புதுவைக்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி தனது இரு சக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி பயணித்துள்ளார்.

அவருடன் அதே இருசக்கர வாகனத்தில் அவரது 10 வயது மகன் ப்ரித்தீஷும் உடன் பயணித்துள்ளார். அவர்கள் வந்த வாகனம் விழுப்புரம் கோட்டாங்குப்பத்தில் ஈசிஆர் சாலையில் வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியது. மோதிய வேகத்தில் கலைநேசனின் இருசக்கர வாகனத்தில் இருந்த நாட்டுவெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த கலைநேசனும், அவரது 10 வயது மகனும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் உடல் சிதறி இரண்டு துண்டாக சாலையில் விழுந்து மரணம் அடைந்தனர். கலைநேசன் ஓட்டிவந்த வாகனமும் இரண்டு மூன்று துண்டுகளாக சிதறிப்போனது. அந்த இடமே குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் போல் சிதறல்களாக இருந்தது.

bike explose in Villupuram ... Father and son who went on a bike were killed when the country bomb exploded

பலத்தச் சத்தத்துடன் வெடி வெடித்ததையும், வாகனம் சிதறி அதில் வந்தவர்கள் உடல் சிதறி பலியானதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். மற்றொரு வாகனத்தில் வந்து மோதியவர் நிலை தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தந்தை மகன் இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனட். அப்பகுதியில் விசாரணை நடத்திய போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டின் மாதிரியை சேகரித்தனர்.

வாகனம் வெடித்து துண்டு துண்டாக 50 அடிக்கு மேல் வீசி எறியும் அளவுக்கு சக்தி வாய்ந்த அப்பொருள் என்னவெண்ரு ஆய்வு செய்து வருகின்றனர். கலை நேசன் நாட்டு வெடிகுண்டுகளை எங்கிருந்து வாங்கி வருகிறார், யாருக்கு விற்கிறார், அதற்கு லைசென்ஸ் பெற்றுள்ளாரா?என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு வெடித்து பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் 10 வயது சிறுவன் உடல்சிதறி உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+