யாருடைய பாவத்தையும் இனி சுமக்க வேண்டியதில்லை.. Relief கிடைச்சிடுச்சி! அப்பாடா.. சி.வி.சண்முகம்
விழுப்புரம்: யாருடைய பாவத்தையும் இனி சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜகவை அதிமுக எம்பியும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அதிரடியாக விமர்சித்திருந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பிடாகம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி வாக்குச் சாவடி குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் அதிமுகவில் சாதாரண தொண்டரும் உயர் பதவிக்கு வர முடியு.ம் குடும்ப, வாரிசு அரசியல் இல்லாத கட்சி அதிமுகதான். ஆனால் திமுகவில் அப்படி இல்லை. அவர்களுடைய குடும்பத்தினரே உயர் பதவிகளை வகிக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு, வரி உயர்வு, ஏமாற்றுத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திமுக அரசை ஆட்சியிலிருந்து விலக்க தயாராகி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. இதனால் அதிமுகவுக்கு இருந்த சுமை குறைந்துள்ளது. எந்த பாரமும் இல்லை , எந்த சுமையும் இல்லை. யாருடைய பாவத்தையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.
ரிலீவாகிவிட்டோம். அப்பாடா என இருக்கிறது. இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால் உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும். அப்போதுதான் நான் அதிமுக , 2000 இல் இருந்து கட்சியில் இருக்கிறேன், 2010 இல் இருந்து இருக்கிறேன், நான் கஷ்டப்பட்டுள்ளேன், எனக்கு இந்த பதவி கொடுங்கள், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுங்கள் என கேட்க முடியும்.
சிரிக்காதீங்க! அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதல்வராகலாம். எந்த பதவியை வேண்டுமானால் கேட்கலாம். கனவு காணலாம், மைக்கை பிடித்து கேட்கலாம். ஆனால் இதெல்லாம் திமுகவில் கேட்க முடியாது, கேட்பது என்ன கனவு கூட காண முடியாது. அவர்கள் வாரிசுகளை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வர முடியாது.
திமுக மட்டுமில்லை இந்தியாவிலும் காங்கிரஸ், பீகாரில் ராஷ்டிரிய சமிதி, ஆந்திராவில் தெலுங்கு தேசம், தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி என எங்கு பார்த்தாலும் வாரிசு அரசியல்தான். உழைப்பவர்களை தேடிச் சென்று பதவி கொடுக்கும் இயக்கம்தான் அதிமுக.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இதனால் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications