“என் பின்னால் மக்கள் வர தயங்குவது ஏன் என தெரியவில்லை..” பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை
விழுப்புரம்: பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை தைலாபுரத்தில் ஏற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்காகப் போராடினாலும் மக்கள் பாமகவை ஏற்க மறுப்பதாக வேதனை தெரிவித்தார். மேலும், ஏன் மக்கள் பாமகவுக்கு ஆதரவு அளிக்க மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாமக தொடங்கப்பட்டு 36வது ஆண்டை முன்னிட்டு திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும், பாமக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மக்களுக்காகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தாலும் பாமகவைக் கோட்டைக்கு அனுப்ப மறுப்பதாகவும் சமூக நீதிக்காகப் போராடும் கட்சியாக உள்ள பாமக ஏற்க மறுக்கிறார்கள் அது ஏனோ என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
ராமதாஸ்: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பாமக இத்தனை ஆண்டுகளில் பல சாதனைகளைச் செய்துள்ளன. சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் ஆகிய 3 கொள்கைகளை உள்ளடக்கி சமூக ஜனநாயகம் என்ற உன்னதமான கொள்கை அடிப்படையில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறோம். இனியும் பாடுபடப் போகிறோம்.
மறுக்கிறார்கள்: ஆனால், தமிழ்நாடு மக்கள் ஏனோ தெரியவில்லை.. பெரியளவில் ஆதரவு தரவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதுபோன்ற கொள்கையுடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்காகப் போராடி வருகிறேன். தமிழக மக்கள் எந்தவொரு பிரச்சினை என்றாலும் வருகிறார்கள்.. நான் தான் அதற்காக போராட்டம் நடத்துகிறேன்.. அறிக்கை விடுகிறேன்.
ஆனாலும், மக்கள் என் பின்னால் வர மறுக்கிறார்கள். தயங்குகிறார்கள். ஏன் எனத் தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் பாமக பின்னால், என் பின்னால் வரும் போது ஒரு ஒளிமயமான எதிர்காலம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.
மின்சார கட்டணம்: இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த போகிறது எனக் கூறியிருந்தேன். நான் சொன்னது போலவே இப்போது உயர்த்திவிட்டனர். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து தமிழக மக்களை வாங்கியவர்கள் தான் இவர்கள்.. தமிழக மக்கள் இவர்களுக்கு என்ன தண்டனை தரப் போகிறார்கள்.. தேர்தல் நேரத்தில் தரப்படும் பணம் உள்ளிட்ட விஷயங்களுக்கு அடிமையாகிப்போன தமிழக மக்களிடம் என்ன சொல்வது.. இப்படி தான் இவர்கள் செய்வார்கள். எல்லா கட்டணத்தையும் உயர்த்த தான் போகிறார்கள்.
தவறிவிடுகிறார்கள்: மக்களுக்காக இதுவரை நாங்கள் பல வகையான போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், தேர்தல் நேரத்தில் நல்ல நேர்மையான கட்சியைக் கோட்டை அனுப்ப மக்கள் தவறிவிடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications