ரயில் தண்டவாளம் மாதிரி... ஈகோ வேணாமே! முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அன்புமணி அட்வைஸ்
விழுப்புரம்: தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
விழுப்புரத்தில் பாமக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரி செய்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், கல்லூரியில் ராக்கிங் செய்யப்பட்ட காரணத்தினால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
எனவே, ராக்கிங் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, முறையாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்,
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனவும் அவர் தெரிவித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications