தீபாவளிக்கே டஃப் கொடுத்த விஜயின் தவெக மாநாடு! டாஸ்மாக் விற்பனை படுஜோராம் ப்ரோ..எத்தனை கோடி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. வழக்கமாக அப்பகுதியில் நான்கு கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும் நிலையில், மாநாடு நடந்த அன்று மொத்தம் எத்தனை கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என்பதை பார்க்கலாம்..

பெரும் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு. பல ஆண்டுகளாகவே தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வந்த நடிகர் விஜய் அதனை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்

tvk manadu tamilaga vetri kazhagam tasmac

தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் பிரச்சனைகள் நெருக்கடிகள் இருந்தபோதும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது.

முன்னதாக மாநாட்டுக்கு வருபவர்கள், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வரக்கூடாது, மீறி மது அருந்தி விட்டு வந்தால் மாநாட்டு திடலுக்குள் வர அனுமதி மறுக்கப்படும், மூத்த குடிமக்கள், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுருந்தது. அதையும் மீறி சிலர் மது அருந்தியதாகக் கூறப்பட்டது.

மேலும் மாநாட்டு மேடையிலேயே சிலர் மது அருந்தியது போல வீடியோக்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் மாநாடு நடைபெற்ற அன்று விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மண்டல டாஸ்மாக் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் 195 மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் வழக்கமாக நான்கு கோடி ரூபாய் வரை விற்பனையாகும் எனக் கூறுகின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற அன்று மது விற்பனை வழக்கத்தை விட அதிகரித்திருக்கிறது. கடந்த 26 ஆம் தேதி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நான்கு கோடியே 69 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. ஆனால் மாநாடு நடைபெற்ற அன்றைய தினம் மட்டும் ஒரு கோடியே 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலாக அதாவது 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+