Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Simbu: சிம்பு அரசியலுக்கு வரலாம்.. எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது.. விஜயை சாடிய சி.வி. சண்முகம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தவெக தலைவர் சமீபமாக அதிமுகவும் விமர்சிக்க தொடங்கியுள்ளார். இது அதிமுகவிற்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சி.வி. சண்முகம், நமக்கு எதிரி திமுக தான். வேறு யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நாளை நடிகர் சிம்புவும் அரசியலுக்கு வரலாம் (Simbu Political Entry) என கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "அவர் வரார்.. இவர் வரார்.. அவர் போறார் எதைப் பத்தியும் கவலை வேண்டாம். நமக்கு திமுக தான் எதிரி. அன்றும், இன்றும் என்றும் நமக்கு திமுக தான் எதிரி. நமக்கும், திமுகவுக்கும் தான் என்றைக்குமே போட்டி. அவர் வந்துவிட்டார், இவர் வந்துவிட்டார் என எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம். மூப்பனார் வந்தார்.. போனார். வைகோ வந்தார்.. வந்த வேகத்திலேயே புயலாக சென்றுவிட்டார்.

cv-shanumugam-on-simbu-admk-cv-shanmugam-slams-vijay-he-also-indicates-simbu-will-come-to-politics

கமலின் தோல்வி

அதன் பிறகு விஜயகாந்த் வந்தார்.. சென்றார். அதன்பிறகு இன்று திமுகவிடம் பிச்சை எடுக்கும் கமல்ஹாசன் வந்தார். உடனடியாக மாற்று சக்தி வந்துவிட்டது என்றனர். தமிழ்நாட்டிற்கே டார்ச்லைட்டில் ஒளி காட்டுகிறார் என்றனர். டார்ச் லைட்டை தூக்கி டிவியை எல்லாம் அடித்து உடைத்தார். தமிழ்நாட்டிற்கே மாற்றம் தருகிறோம் என்றார். கடைசியில் அவரின் தொகுதியிலேயே அவர் தோல்வியடைந்தார். அதோடு அவர் போய் சேர்ந்துவிட்டார். இப்போது இன்னும் சிலர் வந்துள்ளனர்.

சிம்பு கூட அரசியலுக்கு வரலாம்

சினிமா தியேட்டரில் இருந்தால் விசில் அடிக்கலாம். பேருந்தை நிறுத்த வேண்டுமானாலும் விசில் அடிக்கலாம். அதிமுகவுக்கு வாக்களிப்பதை எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது. இன்று ஒருவர், நாளை இன்னொருவர் வருவார் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டாம். நாளை சிம்பு கூட அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு 10 ஆண்டும் ஒன்று முளைக்கும். முளைத்துக் கொண்டே தான் இருக்கும். அதைப்பற்றி நாம் கவலைப்படக் கூடாது.

ஜாம்பவான்களை பார்த்த கட்சி

பல ஜாம்பவான்களை பார்த்த கட்சி அதிமுக. இந்த இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தீய சக்தியை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக தான் தொடங்கினோம். அதை நோக்கி பயணிக்க வேண்டும் தேர்தல் பணியாற்ற நாம் தயாராக வேண்டும். சோர்ந்துவிடக்கூடாது. நாம் வென்றுவிடுவோம் என அஜாக்கிரதையாக இருக்க கூடாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+