விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருவாடுக் கூட மீனாகலாம்.. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக உறுப்பினராக முடியாது.. சி வி சண்முகம்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: கருவாடுக் கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் ஆக முடியாது என விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி - வீடியோ

    தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகம் வந்த சி.வி.சண்முகம் கட்சி முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரைபிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

    சசிகலா அதிமுகவினருடன் பேசி வரும் ஆடியோ குறித்த கருத்துக்கு பதில் அளித்த சி.வி.சண்முகம், அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், யாரை நம்பியும் இந்த இயக்கம் இல்லை. எம்.ஜி.ஆருகு பிறகு அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் அனைவரும் காணபோனால் போனார்கள்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    சசிகலா ஜெயலலிதாவிற்கு உதவியாக வந்தவர். அவருக்கும் அதிமுக விற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேர்தல் ஆணையம் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டிய பொது குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று தெளிவாக தெரிவித்துவிட்டது.

    உயர்நீதிமன்றம்

    உயர்நீதிமன்றம்

    தேர்தல் ஆணையம் சொல்லியது செல்லும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. அதே போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது டிடிவி வெளியே சென்றார். ஆனால் அவ்வழக்கை தொடர்ந்து நடத்தியவர் சசிகலா. உச்ச நீதிமன்றத்தில் தெளிவான தீர்ப்பு சொல்லிவிடப்பட்டது.

    கருவாடு

    கருவாடு

    இப்போ சசிகலா என்ன வேஷம் போட்டாலும் எண்ணம் நிறைவேறாது. கருவாடு கூட மீன் ஆகிவிடும், ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக கூட வர முடியாது. ஒரு சசிகலா இல்லை, ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக வை ஆட்டவோ ஆசைக்க முடியாது என சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்.

    பதிலளிக்க மறுப்பு

    பதிலளிக்க மறுப்பு

    சசிகலா கருத்துக்கு ஓ.பி.எஸ் மறுப்பு தெரிவிக்கவில்லையே என்ற கருத்துக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் சசிகலாவோ நிச்சயம் வருவேன், கட்சியை சரி செய்வேன் என கூறி வருகிறார். அதிமுகவினரோ இது போல் கூறுகிறார்கள். கடைசியில் என்ன நடக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Ex Minister CVe Shanmugam says that Sasikala cannot become AIADMK member.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X