விழுப்புரம் வராகி கோயிலுக்கு சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு! மீட்க உதவுமாறு உருக்கமாக வீடியோ
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் மீடு வருகின்றனர். இதனிடையே, வராகி கோயிலுக்கு சென்ற 20 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் தங்களை மீட்க அரசு உதவ வேண்டும் எனவும் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் புதுவை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் நகரம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகப்பட்சமாக 51 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் தீவுபோல் காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மரக்காணத்திலும், 5 மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் இவர்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், கல்பட்டு, சோணங்கிப்பாளையம், கோலியனூர், நன்னாட்டம்பாளையம், பஞ்சமாதேவி, செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், வானூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
புயல் கரையை கடந்தபோதிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர் வடியவில்லை. இதனிடையே கனமழையினால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பியதால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்பட்டனர். குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கிய நிலையில் இடையிடையே மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இன்றும் விழுப்புரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் உள்ள வராகி கோவிலுக்கு சென்றவர்கள், கோயிலை சுற்றி வெள்ள நீர் ஓடுவதால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்துள்ளனர். சுமார் 20 பக்தர்கள் கோயிலில் சிக்கியுள்ள நிலையில் தங்களை மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றிலும் வெள்ள நீர் அடித்து செல்லும் நிலையில் தங்களை எப்படியாவது மீட்குமாறு அவர்கள் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications