கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டத்தில் திமுக-அதிமுக வெல்லப்போகும் தொகுதிகள்.. சத்தியம் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக உருவான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும், திமுக ரிஷிவந்தியம் தொகுதியில் வெல்ல அதிக வாய்ப்பு, ஒரு தொகுதியில் இழுபறி உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்பட 4 திமுக கூட்டணி வெல்லும் என்றும் ஆலங்குளத்தில் அதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

சத்தியம் தொலைக்காட்சி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் தற்போத கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டத்தில் எந்த கட்சிக்கு எவ்ளவு சதவிதம் ஆதரவு உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்

அதிமுக

அதிமுக

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுகவிறகு 51 சதவீதம் ஆதரவும், திமுகவுக்கு 38 சதவீதம் ஆதரவும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 5% ஆதரவும், அமமுகவிற்கு 3% ஆதரவும் உள்ளதாக சத்தியம் டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக

திமுக

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக 34 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும், அதிமுக 26 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் கணிப்பில் சத்தியம் டிவி கூறியுள்ளது. அமமுக 17 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளதாகவும், மநீமவிற்கு 11 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் சத்தியம் டிவி தனது கணிப்பில் தெரிவித்துள்ளது,

சங்கராபுரம்

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக 40 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளதாகவும், காங்கிரஸ் 32 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் சத்தியம் டிவி கூறியுள்ளது. இங்கு அமமுக 11 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளதாகவும், நாம் தமிழர் 9 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், மநீமவிற்கு 7 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் சத்தியம் டிவி தனது கணிப்பில் தெரிவித்துள்ளது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் பாமக 471%; திமுக- 45%; அமமுக- 3% மநீம-1% நாம் தமிழர்- 3% வாக்குகள் பெறும் என்று கூறப்பபட்டுள்ளது.

வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர்

தென்காசி மாவடம் சங்கரன்கோவில் தொகுதியில் திமுக 51%; அதிமுக- 38%; அமமுக- 8% மநீம-1% நாம் தமிழர்- 1% வாக்குகள் பெறும் என்று கூறப்பபட்டுள்ளது. இதேபோல் வாசுதேவநல்லூர் தொகுதியில் மதிமுக 45%; அதிமுக- 41%; அமமுக- 3% நாம் தமிழர்- 3% வாக்குகள் பெறும்- சத்தியம் டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம்

ஆலங்குளம்

கடையநல்லூர் தொகுதியில் இ.முஸ்லிம் லீக் 34%; அதிமுக- 30%; அமமுக- 13% வாக்குகள் பெறும் என்று சத்தியம் டிவி கணித்துள்ளது. தென்காசி தொகுதியில் காங்கிரஸ் 38%; அதிமுக- 33%; அமமுக- 19% நாம் தமிழர் 1% வாக்குகள் பெறும் என்றும் சத்தியம் டிவி குறிப்பிட்டுள்ளது. ஆலங்குளம் தொகுதியில் அதிமுக- 45%; திமுக- 41%; மநீம- 11% அமமுக- 3% வாக்குகள் பெறும் என்றும் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+