வசியம் செய்யும் சாமியார் டேனியல்.. மகளுக்காக பணத்தை தொலைத்த முருகேசன்.. திண்டிவனத்தில் அக்கப்போர்
12 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்
Recommended Video

திண்டிவனம்: வசியம் செய்யணுமா, என்கிட்ட வாங்க.. பில்லி, சூனியம் வைக்கணுமா, என்கிட்ட வாங்க.. என்று கூவி கூவி அழைத்து, மக்களை ஏமாற்றிய டுபாக்கூர் சாமியார்.. டேனியல் சித்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டிவனத்தில் திருப்புளிசாமி தெருவில் வசித்து வருபவர் டேனியல் சித்தர். இவர் ஒரு சாமியார் என்று 15 வருஷமாக இந்த ஊருக்குள் சொல்லி கொண்டு திரிந்தவர்.
நெல்லை பக்கம் உள்ள மூன்றாம்படை பகுதிதான் சாமியாருக்கு சொந்த ஊர். அருள் வாக்கு எல்லாம் இவர் தர மாட்டார். மாந்திரீகம், பில்லி சூனியம், வசியம், இப்படி கோக்குமாக்கு வேலைகளில் மட்டுமே இறங்குவார்.

மனநலம்
இதை சொல்லி பலரிடம் பல லட்சம் ரூபாயையும் பறித்துள்ளார். இவரிடம் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டவர்தான் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர். முருகையன் மகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

முருகேசன்
அதனால், டேனியல் சித்தர் பற்றி யாரோ சொல்வதை கேட்டு, அவரிடம் சென்று மகளை பற்றி சொல்லி உள்ளார். இதற்கு பிறகுதான் முருகேசனிடம் மெல்ல மெல்ல பணத்தை கறந்தார் டேனியல். உடல்நல குறைபாடு என்று ஆரம்பித்து.. கடைசியில் முருகேசன் வீட்டில் புதையல் இருப்பதாக முருகேசனிடமே சொல்லி அதற்கும் பணத்தை கறந்துள்ளார்.

செய்வினை
மொத்தம் 12 லட்சம் ரூபாயை இல்லாத புதையலுக்கு தந்துள்ளார் முருகேசன். கடைசியில் மகளும் குணமாகவில்லை, புதையலும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகேசன், பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சாமியார், செய்வினை செஞ்சிடுவேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.

விஏஓ
இதன்பிறகுதான் முருகேசன் போலீசுக்கு சென்று புகார் செய்யவும், போலி சாமியார் டேனியல் சித்தர் கைதாகி உள்ளனர். இப்படி ஒரு சாமியாரை புதையல் இருப்பதாக நம்பி 12 லட்சத்தையும் இழந்துள்ள முருகேசன், ஓய்வுபெற்ற விஏஓ.. என்பதுதான் வேதனை!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications