கிளைமேக்ஸை நெருங்குகிறது.. செஞ்சி சிறுமி வழக்கில்.. செங்கல் சூளையில் இறங்கிய தடயவியல் நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு.. கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 மாதத்திற்கும் மேலாக சிறுமி கிடைக்காத நிலையில் வழக்கில் விரைவில் முடிவு தெரிய வரும் என்று தகவல்கள் வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி, நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா மாயமான சம்பவம் நடந்து ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது.

Gingee Missing Girl Case

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு

கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய், பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார். இப்போது வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. முதலில் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் அவர்களும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் நேரடியாக சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் கிராமத்திற்கு வந்து விசாரணை செய்தார். அவர் வீட்டின் கதவை உள்ளே பூட்டி பாட்டி, தாய், தந்தையிடம் தனித்தனியாக விசாரித்ததுடன், கூடுதலாக ஆய்வாளர்கள் குமார் மற்றும் சாஸ்தா ஆகியோரையும் களமிறக்கியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கி கணக்குப் புத்தகங்களை ஆய்வுக்கு எடுத்துள்ள சிபிசிஐடி தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மீண்டும் ஆலம்பூண்டி பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குத் திரும்பி, தடயவியல் நிபுணர்களை நேரில் வரவழைத்துத் தீவிர சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஏற்கனவே செங்கல் சூளையில் சோதனை செய்திருந்தனர்.

மீண்டும் செங்கல் சூளை பக்கம் திரும்பியது ஏன்?

சிறுமி ஹேமலதா மாயமான அக்டோபர் 11 இரவு, ஆலம்பூண்டி பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் விடிய விடிய செங்கல் சுடும் பணி நடந்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது, அந்தச் செங்கல் சூளையில் பணியாற்றிய தொழிலாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.

ஆனால், டிஐஜி விக்ரமன் வழக்கை நேரில் கையிலெடுத்து மறுஆய்வு செய்த பிறகு வழக்கின் போக்கே மாறி உள்ளது. முதல் 10 நாட்களில் உள்ளூர் போலீசாரால் தவறவிடப்பட்ட தடயங்களை அறிவியல் பூர்வமாக சோதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே, அந்தச் செங்கல் சூளையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாமா என்ற சந்தேகத்திற்கு மீண்டும் சிபிசிஐடி வந்துள்ளனர்.

இந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள, சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைப்பு

கண்களுக்குத் தெரியாத மிக நுணுக்கமான தடயங்களைக் கூட அறிவியல் கருவிகள் மூலம் கண்டறியும் வகையில், விழுப்புரம் மற்றும் சென்னையிலிருந்து தடயவியல் துறை நிபுணர்கள் செங்கல் சூளைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்:

செங்கல் சூளையின் உட்பகுதிக்குள் உள்ள சாம்பல் குவியல்கள் மற்றும் சுற்றியுள்ள மண் பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, அதில் மனித எலும்புத் துகள்களோ அல்லது வேறு ஏதேனும் உயிரியல் தடயங்களோ கலந்துள்ளதா என்பதைத் தடயவியல் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். சம்பவம் நடந்த இரவு 8 மணி முதல் அதிகாலை வரை செங்கல் சூளையில் பணியில் இருந்தவர்கள் யார் யார் என்று விசாரணை நடக்கிறது. மேலும் வெளியாட்கள் யாரேனும் நள்ளிரவில் அங்கு வந்து சென்றார்களா என்பது குறித்துத் தொழிலாளர்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

இதனால் வழக்கு இறுதிக்காட்டத்தை எட்டுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் சிபிசிஐடி வியூகம்

ஒருபுறம் பெற்றோரின் வங்கிக் கணக்குகள் சோதனை செய்யப்படுகிறது. மறுபுறம் காடுகள் மற்றும் செங்கல் சூளையில் தடயவியல் நிபுணர்களின் சோதனை என CBCID பலமுனைகளில் வியூகத்தை இறுக்கியுள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான மர்மத்திற்கு, தடயவியல் நிபுணர்களின் இந்த ஆய்வு மிக முக்கியமான பதிலைத் தரும் என்று சிறுமியின் கிராம மக்கள் பதற்றத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+