செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த திருப்பம்.. பாட்டியின் பக்கம் ஃபோகஸை திருப்பிய சிபிசிஐடி! கோணமே மாறுது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமாகி இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

உள்ளூர் போலீசாரைத் தொடர்ந்து களமிறங்கிய சிபிசிஐடி அதிகாரிகள், கடந்த சில நாட்களாக தீவிர தேடுதல் மற்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை அதிகம் பேசப்படாத சிறுமியின் பாட்டியிடம் சிபிசிஐடி தனது பார்வையைத் திருப்பியுள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இவ்வழக்கு தாய், பாட்டி மற்றும் சிறையில் இருந்து வெளியே வந்திருந்த பழைய குற்றவாளி ராஜதுரை என மூன்று முக்கிய முனைகளில் நகரத் தொடங்கியுள்ளது.

Gingee villupuram

பாட்டியின் பக்கம் திரும்பிய சந்தேகம்: பின்னணி என்ன?

சிறுமி மாயமான அன்று நள்ளிரவு, சிறுமியுடன் ஒரே அறையில்தான் தாயும் பாட்டியும் படுத்து உறங்கியுள்ளனர். பொதுவாக வயதான பாட்டிகளுக்கு லேசான சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்துவிடும் இயல்பு உண்டு. அப்படி இருக்கும்போது, அதிகாலையில் குழந்தை படுக்கையை விட்டு எப்படி நகர்ந்தார்? வெளியே யாராவது தூக்கிச் சென்றார்களா? அல்லது கதவு திறந்த சத்தம் கூட கேட்காத அளவுக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு விடை காணவே பாட்டியை சிபிசிஐடி அதிகாரிகள் தனியாக அழைத்து துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

குடும்பத்திற்குள் நடந்த உள் விவகாரங்கள், யாருக்கும் தெரியாத கொடுக்கல் வாங்கல் அல்லது ஏதேனும் குடும்பப் பூசல்கள் குறித்து முதியவரான பாட்டியிடம் விசாரித்தால் உண்மை வெளிவரலாம் என்ற அடிப்படையில் இந்த விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறது.

3 முனைகளில் பாயும் சிபிசிஐடி வலை

தற்போது சிபிசிஐடி தனிப்படையின் விசாரணை 3 முக்கிய நபர்களை மையமாக வைத்து முழு வேகத்தில் நகர்கிறது:

1. தாய் பவானியிடம் தொடரும் விசாரணை:

சிறுமியின் தாய் பவானியிடம் ஏற்கனவே பல மணி நேரம் தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளாக இல்லாத திடீர் பிறந்தநாள் கொண்டாட்டம், சாமியார் தொடர்பு, நள்ளிரவில் வாசற்கதவு திறந்திருந்தது, மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் கூறப்பட்ட தகவல்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை மையமாக வைத்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

2. பாட்டியிடம் தனி விசாரணை:

சம்பவத்தன்று இரவு வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக அறிய பாட்டியிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது. தாயார் கூறிய பதில்களோடு பாட்டி சொல்லும் தகவல்கள் ஒத்துப்போகிறதா அல்லது ஒன்றுக்கொன்று முரண்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேருக்கு நேர் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

3. ஜெயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பழைய குற்றவாளி ராஜதுரை:

பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையை சிறையில் இருந்து வெளியே எடுத்து சத்யமங்கலம் காவல் நிலையத்திலும், சிறுமி படித்த தொடக்கப் பள்ளியிலும் வைத்து சிபிசிஐடி விசாரித்துள்ளது. உள்ளூர் பழைய குற்றவாளிகள் அல்லது வெளியாட்கள் குழந்தையைக் கடத்துவதற்கு ஏதேனும் உதவி செய்தார்களா என்ற கோணத்தில் இந்த விசாரணை தொடர்கிறது.

மர்ம முடிச்சுகள் உடையும் நேரம்

ஒருபுறம் குடும்பத்திற்குள்ளேயே ஏதேனும் ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளதா என்ற பார்வையில் தாயும் பாட்டியும் விசாரிக்கப்படுகின்றனர். மறுபுறம் வெளிப்புற ஆட்களின் அத்துமீறலா என்ற கோணத்தில் குற்றவாளி ராஜதுரை விசாரிக்கப்படுகிறார்.

குடும்பத்தினர் மற்றும் வெளிப்புற நபர் என இருவேறு முனைகளிலும் ஒரே நேரத்தில் பிடியை இறுக்கியுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், சிறுமி ஹேமலதா எங்கு இருக்கிறார் என்ற உண்மையை மிக விரைவில் வெளிக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+