செஞ்சி சிறுமி.. 35 நாளுக்கு பின் ட்விஸ்ட்! பெற்றோரின் பாஸ்புக் பறிமுதல்! CBCID கையில் சிக்கியது என்ன

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆய்வாளர்கள் குமார், சாஸ்தா ஆகியோர் அடங்கிய தனிப்படை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது. அண்மையில் சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாகக் கிராமத்திற்குச் சென்று வீட்டின் கதவை உள்ளே பூட்டி பாட்டி, தாய் மற்றும் தந்தையிடம் தனித்தனியாக விசாரித்தார்.

Gingee Missing Girl Case

இந்த அதிரடி விசாரணையின் தொடர்ச்சியாக, சிறுமியின் பெற்றோரான வடிவேலு மற்றும் பவானி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் வங்கி கணக்குப் புத்தகங்களை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

செல்போன் மற்றும் வங்கி ஆவணங்களைப் பறிமுதல் செய்தது ஏன்?

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காடுகள், மலைக் குன்றுகள், கிணறுகள், சுடுகாடுகள், 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், ரவுடி ராஜதுரை, நாமக்கல் கோவில் சிசிடிவி எனப் பல திசைகளில் தேடியும் குழந்தையைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. டிஐஜி விக்ரமன் குடும்பத்தினரைத் தனித்தனியே விசாரித்தபோது அவர்கள் அளித்த வாக்குமூலங்களில் சில நுணுக்கமான முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, விசாரணையைப் பொருளாதார மற்றும் டிஜிட்டல் கோணத்திற்கு சிபிசிஐடி அதிகாரிகள் நகர்த்தியுள்ளனர்:

குழந்தை மாயமாவதற்கு முன்போ அல்லது மாயமான பிறகோ பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதா என்பதை அதிகாரிகள் துருவி வருகின்றனர். வழக்கத்திற்கு மாறாகப் பெரிய தொகை ஏதேனும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா, அல்லது யாருக்காவது பணம் அனுப்பப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது.

வங்கி கணக்குப் புத்தகங்கள் மட்டுமின்றி, பெற்றோரின் செல்போன்களில் உள்ள யுபிஐ (UPI) செயலிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடந்த பணப் பரிமாற்ற விவரங்களையும் சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் சிபிசிஐடி சல்லடை போட்டு வருகிறது.

சிறுமியின் தாய் மற்றும் தந்தையின் செல்போன்களில் இருந்து சம்பவம் நடந்த நாட்களில் யாருக்கெல்லாம் அழைப்புகள் சென்றுள்ளன, ஏதேனும் முக்கிய அழைப்புப் பதிவுகளோ அல்லது வாட்ஸ்அப் தகவல்களோ அழிக்கப்பட்டுள்ளதா என்பதை மீட்டெடுக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே எழுந்த பணப் பரிமாற்ற சர்ச்சைகள்

இந்த வழக்கில் ஆரம்பம் முதலே பணம் தொடர்பான சில புள்ளிகள் அடிபட்டு வந்தன. குறிப்பாக, 6 ஆண்டுகளாகக் கொண்டாடப்படாத பிறந்தநாள் விழா அன்று மட்டும் மூத்த மகளுக்குப் பேசி வைக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இருந்து ₹2,000 செலவு செய்து கேக் வாங்கிக் கொடுத்தது, மற்றும் நடுப்பட்டு கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாயாருக்கு ₹2,000 பணம் கொடுத்து உதவிய விவகாரம் ஆகியவை ஏற்கனவே சிபிசிஐடி விசாரணையில் சிக்கியிருந்தன.

இதன் தொடர்ச்சியாகவே, குடும்பத்தின் முழுமையான வங்கிப் பரிவர்த்தனைகளையும் செல்போன் தரவுகளையும் ஆய்வு செய்தால், குழந்தை மாயமானதன் பின்னணியில் ஏதேனும் பணத் தகராறு, கடன் பிரச்னை அல்லது வேறு ஏதேனும் மறைக்கப்பட்ட காரணங்கள் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என சிபிசிஐடி கருதுகிறது.

ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேக்கமடைந்திருந்த வழக்கில், டிஐஜி விக்ரமனின் நேரடி வருகைக்குப் பிறகு பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது, செஞ்சி சிறுமி ஹேமலதா வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+