கிடுகிடுன்னு அண்டம் நடுங்கப் போகுது.. போதுமடா சாமின்னு ஓடப்போறாங்க.. டாக்டர் ஐயா யாரை சொல்றாரு? ஓஹோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இன்று பேசியிருக்கும் கருத்துக்களை தமிழக கட்சிகள் உற்றுகவனித்து வருகின்றன. என்ன காரணம்?

பிறந்தநாள்: இன்று பாமக நிறுவனர் ராமதாஸின் 86-வது பிறந்த நாளாகும்.. இதனை பாமகவினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். தமிழக தலைவர்கள் டாக்டர் ராமதாஸுக்கு வாழ்த்து சொல்லி உள்ளனர்.

Ramadoss Stalin PMK

அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாளையொட்டி நிறுவனர் நாள் விழா, மரக்கன்று நடும் விழா, பாவரங்கம் என முப்பெரும்விழா பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது.

வன்னியர்: வன்னியர் சங்கத்தலைவர் மறைந்த காடுவெட்டி குரு சிலை அருகே 86 மரக்கன்றுகளை ராமதாஸ் நட்டுவைத்தார்.செய்தியாளர்களிடம் பிறகு பேசும்போது, "அறத்தில் சிறந்தது மரம் நடுவது. அந்தவகையில் இந்நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இங்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். பசுமையான சூழலே நிலவ வேண்டும்" என்றார்.இதற்கு பிறகு, மாணவர்கள் மத்தியில் ராமதாஸ் பேசும்போது, மரக்கன்றுகள் நடுவது, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

தொடர்ந்து பேசும்போது, "வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட் ராமனை சந்தித்து மனு கொடுத்தோம். அப்போது அவர், உத்தரப்பிரதேசத்தில் தனது சாதிக்காரர்கள் குதிரை வண்டி ஓட்டுகிறார்கள் என்று தன் மக்களைப் பற்றி குறிப்பிட்டார்.

மத்திய அரசின் உயர் பதவியில் ஈழவர்கள் உள்ளனர். அந்த சாதியிலிருந்து 4 முதல்வர் உருவாகியுள்ளனர். ஆனால், இங்கு குறைவில்லாமல் குடிக்க வைக்கிறார்கள். அவர்களை மீட்க முடியாமல் தவிக்கும் நான், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து 35 நிமிடம் வகுப்பெடுத்தேன். அப்போது, இந்த ஊமை ஜனங்களுக்கு உங்களை விட்டால் யார் செய்யப் போகிறார்கள்? என்றேன்.

ஊமை ஜனங்கள்: ஆனால், இந்த ஊமை ஜனங்கள் இன்னும் இரண்டு மாதத்தில் பேசப் போகிறார்கள். இந்த ஊமை ஜனங்கள் நாடே கிடுகிடுக்க, ஸ்தம்பிக்க, ஊமை ஜனங்களாக இருந்தவர்களுக்கு இவ்வளவு தைரியம், துணிச்சல் எப்படி வந்தது என்று மற்றவர்கள் பேசும் அளவுக்கு ஆட்சியில் இருப்பவர்களுடைய படை சாய, கோலோச்சுவது போதுமடா சாமி என்று ஓட பேசப்போகிறார்கள். இந்த நாடு அதனை பார்க்கத்தான் போகிறது.

ஏன் உங்களது அப்பா வீட்டு சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி, இது எங்களால் வளர்ந்தது, இது எங்கள் மண், உனக்கு இங்கே என்ன வேலை? உன்னிடம் போய் நான் 10.5 சதவீதம் கேட்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. உன்னை கோட்டையில் சந்திக்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது.

மத்திய அரசு: சாதிவாரி கணக்கெடுப்பை உன்னிடம் கேட்டால்... நீ மத்திய அரசை கை காட்டுகிறாய். அதற்கு எதுக்கு முதல்வர்? ஏதோ நடக்கப் போகிறது; நடத்திக்காட்டப் போகிறோம். அண்டம் கிடுகிடுங்க நடக்கப் போகிறது" என்றார் ராமதாஸ்.

டாக்டர் ராமதாஸின் இந்த பேச்சினை திமுக உள்ளிட்ட கட்சிகள் உற்றுகவனித்து வருகின்றன.. கடந்த காலங்களில் மட்டுமல்லாமல், நேற்றுகூட நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.

வன்னியர்கள்: அதில், "வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அரசை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இன்றைய தினமும் எச்சரிக்கை டாக்டர் ஐயாவின் பேச்சுக்கள் தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது, "பட்ஜெட்டில் தமிழகம் குறித்து சொல்லியிருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 எம்பி-க்களை கொடுத்திருக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கிறார்.

டெபாசிட்: பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள். 25 எம்பி-க்களை கொடுக்காவிட்டால் தமிழகம் புறக்கணிக்கப்படுமா? பொது வாழ்க்கையில் உள்ளவர் பேசும் பேச்சா இது? தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டுள்ளனர். ஏற்கெனவே அவர்களுக்கு ஜனநாயக ரீதியாக தண்டனை கொடுத்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட்கூட வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+