"என் வீட்டுக்காரர் கெஞ்சியும் என்னை விடல.. மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டார்".. மனைவி ஷாக் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கல்யாணம் ஆகி 2 மாசம்கூட ஆகல... கட்டின மனைவி மீது மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி கொளுத்திவிட்டார் கணவர்.. எல்லாத்துக்கும் காரணம் வரதட்சணைதான்.. இப்போது புதுமாப்பிள்ளை கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

வானூர் பரங்கினி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா.. நைனார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரி... இவர்கள் 2 பேரும் காதலித்தனர்.. காதலித்து கடந்த ஜூன் 3ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

 husband tries to kill his wife due to dowry in vizhupuram

ஊரடங்கில் திடீரென ராஜேஸ்வரி காணாமல் போனார்.. பிறகு லாக்டவுனில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 3-ம் தேதி ராஜேஸ்வரியை ஜீவா கல்யாணமும் செய்து கொண்டார்.

இந்நிலையில் ராஜேஷ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது... உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்.. "திடீரென ராஜேஸ்வரி தீக்குளிச்சிட்டாள்... நான் தான் காப்பாத்தினேன்" என்று ஜீவா மாமியார் வீட்டிற்கு போன் செய்து சொல்லவும், பதறி அடித்து கொண்டு வந்தனர்.

இதனிடையே வானூர் போலீசார் இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தனர்... அப்போது பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரியிடம் இதை பற்றி விசாரித்தபோதுதான், தான் ஜீவாவின் வண்டவாளம் வெளியே தெரிந்தது.

இந்த ஊரடங்கினால் ஜீவாவுக்கு வேலை இல்லாமல் இருந்திருக்கிறது.. நகை, உட்பட எதுவுமே இல்லாமல் ராஜேஸ்வரி கல்யாணம் ஆகி வந்ததால், வரதட்சணை கேட்டு ஜீவா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.. இந்த உண்மையை வெளியே சொன்னால் ராஜேஸ்வரியின் அப்பா, அண்ணனை கொலை செய்துவிடுவதாகவும் ஜீவாவே மனைவியை மிரட்டினாராம்.

கடந்த 3-ம் தேதியும் தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது.. அப்போது வாக்குவாதம் முற்றவும், மண்ணெண்ணெய் எடுத்து, தன் மீது ஊற்றி எரித்துவிட்டதாக ராஜேஸ்வரி போலீசில் வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து, வானூர் போலீசார் ஜீவாவை கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+