செஞ்சி சிறுமியின் குடும்பத்தை விஜய் ஏன் சந்திக்கவில்லை? ஆலம்பூண்டிக்கு நேரில் சென்ற கனிமொழி கேள்வி

Subscribe to Oneindia Tamil

செஞ்சி: செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதாவை மீட்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை விஜய் ஏன் நேரில் சந்திக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

kanimozhi

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராம குளக்கரை தெருவில் வசிக்கும் வடிவேலு- பவானி தம்பதியினரின் ஏழு வயது மகள் ஹேமலதா. இவர் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு காணாமல் போனார். அவர் காணாமல் போய் இன்றோடு 34 நாட்கள் ஆகிய நிலையில் இதுவரை சிறுமி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்வேறு சாட்சிகளிடம் அவர்கள் விசாரித்த போதும் சிறுமி குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் சிபிசிஐடி போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆலமுண்டி கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.

பவானி அழுகை

கனிமொழியை பார்த்ததும் பவானி அழுதார். அப்போது அவரது கண்ணீரை துடைத்த கனிமொழி தேற்றினார். பின்பு நடந்த சம்பவம் குறித்து பவானியிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், சிறுமியை விரைவில் கண்டுபிடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., "இரண்டாம் வகுப்பு படிக்கக் கூடிய ஏழு வயது ஹேமாவதி, தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாள் காலையிலிருந்து காணவில்லை. குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது. ஆனால், அந்தக் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கு உண்மையாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

குழந்தையை காணவில்லை

குழந்தையைக் காணோம்னு தெரிந்ததுமே சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்காங்க. காவல்துறையும் விசாரிக்கத் தொடங்கி இருக்காங்க. ஆனால் எனக்கு இருக்கக் கூடிய ஒரு கேள்வி, 2013-ல் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கக் கூடிய உத்தரவின்படி, ஒரு குழந்தை காணாமல் போனால் அதை 'மிஸ்ஸிங்' என்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கூடாது. 24 மணி நேரத்துக்குள் அதை 'kidnap' அல்லது 'trafficking' என்றுதான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் ஏன் 'மிஸ்ஸிங்' என்று பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

kanimozhi

முதல்வரின் நேரடி பார்வை

குழந்தைகள் நலன் மற்றும் காவல்துறை இரண்டுமே முதலமைச்சர் விஜய்யின் நேரடி பார்வையில் இருக்கக்கூடிய துறைகள். குழந்தைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. இந்தக் குடும்பத்துக்கு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லி, சிறுமியை நிச்சயமாகக் கண்டுபிடித்துக் கொடுப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்.

35 நாள் அந்தக் குழந்தை காணாமல் போய், ஆனால் எந்தவித சரியான நடவடிக்கையும் இல்லை. பெற்றோருக்கு இந்தக் குழந்தை கிடைக்குமா, எங்கு இருக்கு என்று நம்பிக்கை தரக்கூடிய வகையில் ஒரு சின்ன தகவல் கூட தரப்படவில்லை.

குற்றங்கள்

இங்கே மட்டும் இல்ல, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. கடலூரில் மட்டும் கிட்டத்தட்ட எத்தனையோ குழந்தைகள் ஒரே நாளில் காணாமல் போயிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய அவலம் நடந்திருக்கு. காலேஜில் படிக்கிற மாணவர்கள், வேலைக்குப் போற பெண்கள், ஒரு சிறுவன், அவங்க அம்மா என இத்தனை பேர் காணாமல் போயிருக்காங்க.

திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய ஆறுதலும் பாதுகாப்பும் வழங்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஏன் முதல்வர் விஜய்யோ அல்லது இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்களோ சந்திக்கவில்லை?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+