உளுந்தூர்பேட்டை அருகே 5 அடி உயரம் 4 அடி அகலம்.. 8 கைகளுடன் கொற்றவை சிலை கண்டுபிடிப்பு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பில்ராம்பட்டு கிராமத்தில் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம், மற்றும் அருப்புக்கோட்டை ஸ்ரீதர் , தாமரைக் கண்ணன் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , நெய்வனையை அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தில் வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.

சேஷ நதிக்கரையின் வடக்கே அமைந்துள்ள பில்ராம்பட்டு ஊரின் வயல்வெளியில் மத்தியில் மரங்கள் சூழ அதன் அடியில் ஒரு பலகை கல்லினால் ஆன சிற்பம் ஒன்று காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகப் பெண் உருவம் காணப்பெறுகிறது. அச்சிற்பத்தைத் தூய்மை செய்து ஆய்வு செய்ததில் அச்சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை என்று கண்டறியப்பட்டது.
வித்தியாசமான உள்ளூர் கலைபாணியில் அமைந்த மகுடம் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் சரப்பளி போன்ற பட்டையான அணிகலனையும், தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான மார்பு கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.
எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தை ஏந்திய நிலையில் ஏனைய வலது கரங்கள் முறையே வாள் , மணியுடன் மற்றொரு கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே வில் , கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
கொற்றவையின் தலையருகே வலது புறம் சூலமும் , சிம்மமும் காட்டப்பட்டுள்ள நிலையில் , இடதுபுறம் கலைமானும், காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.
இச்சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களின் கொண்டு இக்கொற்றவை சிற்பம் கி.பி 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான கொற்றவை சிற்பங்கள் இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும் , இக்கொற்றவையின் தலை மகுடம் எங்கும் காணாத வகையில் தனித்துவுமாய் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். சுமார் 1200 வருடம் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications