கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் எல்கே சுதீஷ் 4லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
lok sabha election results 2019: விஜயகாந்தின் மைத்துனர் எல்கே சுதீஷ் சுமார் தோல்வி முகத்தில் உள்ளார்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கெளதம் சிகாமணி வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சுதீஷை விட
4 லட்சத்து 2ஆயிரத்து 638 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடைசி சுற்றான 24வது சுற்று முடிவில்
மொத்தம் 11 லட்சத்து 98 ஆயிரத்து 64 வாக்குகள் பதிவாகி இருந்தது.
இதில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி 7லட்சத்து 18ஆயிரத்து 306 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தேமுதிக வேட்பாளர்கள் எல் கே சதிஷ்
3 லட்சத்து 20 ஆயிரத்து 420 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் 50 ஆயிரத்து 23 வாக்குகளும், மக்கள் நீதி மையம் வேட்பாளர் கணேஷ் 14 ஆயிரத்து 700 வாக்குகளும், நாம் தமிழர் ஷர்புதின் 30 ஆயிரத்து 320 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.












Click it and Unblock the Notifications