’பிரியா ஸ்வீட்டி’ சிக்கியாச்சு.. வீடியோ காலுக்கு 1500..ரூமுக்கு 3000! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
விழுப்புரம்: இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் கிடைக்கும் இளம்பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி இரண்டு ஆண்டுகளாக ஆண்களிடம் பணம் பறித்து வந்த மரக்காணத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வாய்ஸ் சேஞ்சர் என்ற செயலி மூலம் பெண்கள் போல பேசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ்க்கையையே தொலைத்தவர்கள் ஏராளம் இருக்க, தற்போது டின்டர், அன்பே உள்ளிட்ட டேட்டிங் செயலிகளும் இருக்கிறது.

இதுமட்டுமின்றி ஓரினச்சேர்க்கைக்கு கூட செயலிகள் இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து மோசடி கும்பலும் தங்களது கைவரிசைகளை மற்றொருபுறம் அரங்கேற்றி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் செல்போன் ஆப் மூலம் இளைஞர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல் அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது கூட அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் சபல ஆண்களை குறிவைத்து பெண்கள் போல பேசி பணத்தை ஆட்டைய போட்டு வந்த மரக்காணம் கிருஷ்ணனை கைது செய்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார். வாய்ஸ் சேஞ்சர் ஆப் மூலம் மெசஞ்சரில் பேசி பல லட்சம் ரூபாயை அவர் சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அரைகுறை ஆடைகளுடன் ரிலீஸ் போடும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை வைத்து அவர் பணம் சம்பாதித்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் தன்னுடைய புகைப்படத்தை பாலியல் தொழில் செய்யும் பெண் என சமூக வலைதளக்கணக்கை உருவாக்கி சில ஆண்களிடம் அதனை அனுப்பி பணம் பறிக்கும் சம்பவம் நடைபெறுவதாகவும், தனக்கு தெரிந்த சிலர் இதுகுறித்து தன்னிடம் தெரிவித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் தனது மற்றொரு நண்பர் மூலம் அந்த குறிப்பிட்ட சமூக வலைதளக் கணத்தை தொடர்பு கொண்டு பேசிய போது ஆபாச புகைப்படம் அனுப்ப ஐநூறு ரூபாய், வீடியோ காலில் பேச 1500 ரூபாய், அறை எடுத்து தங்க 3000 ரூபாய் செலுத்தினால் சந்திக்கலாம் எனவும், இதற்காக ஜிபே எண் மற்றும் கியூஆர் கோடை மெசஞ்சர் மூலம் அனுப்பியதாக தெரிவித்தார். மேலும் வாய்ஸ் சேஞ்சர் என்ற அப்ளிகேஷன் மூலம் பேஸ்புக் மெசஞ்சரில் பெண் குரலில் பேசியதாகவும், அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை அடுத்து பேஸ்புக் கணக்கில் ஜிமெயில் முகவரி மற்றும் ஜிபே கியூஆர் கோட் பயன்படுத்தி பணம் பெறப்பட்ட வங்கிக் கணக்கின் செல்போன் என்னை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரித்த போது விழுப்புரம் மரக்காணம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் கிருஷ்ணன் சிக்கினார். விசாரணையில் பள்ளிக் கூடம் கூட முழுவதாக செல்லாத கிருஷ்ணன் ஹைதராபாத்தில் வேலை செய்து இருக்கிறார்.

தொடர்ந்து புதுச்சேரியில் நகைக்கடையில் பணியாற்றிய அவர் பணம் சம்பாதிப்பதற்காக போலீ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி ஆண்களிடம் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சபலத்தில் தொடர்பு கொள்ளும் ஆண்களிடம் பணத்தைப் பெற்று விட்டு அவர்களது நம்பர்களை பிளாக் செய்து விட்டு அடுத்த ஆண்களை ஏமாற்ற புறப்பட்டு விடுவானாம்.
இப்படியாக கடந்த சில நாட்களில் மட்டும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது. பகலில் தங்க நகை கடை விற்பனை பிரதிநிதியாகவும் இரவில் பெண் போல பேசி பணம் சம்பாதித்ததாக போலீசாரின் விசாரணையில் கூறியுள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டி வீடியோ போடும் பெண்களின் வீடியோக்களை எடுத்து கிருஷ்ணன் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications