திண்டிவனம் மயான கொள்ளை திருவிழாவில் மோதல்.. ராமதாஸ் வீடு அருகே பாமகவினர் மீது போலீஸ் தடியடி
விழுப்புரம்: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழாக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. திண்டிவனம் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்வில், பாமகவினர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறை அங்கு தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. அங்கு மாசி மாதம் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா மிகவும் பிரபலமானது. இன்று மாலை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. பலவிதமான வேடங்களில் மக்கள் நடனமாடினார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் முன்பு தான் இந்த திருவிழா நடைபெற்றது.

திண்டிவனம் மயானக் கொள்ளை மோதல்
மிகவும் உற்சாகத்துடன் திருவிழா தொடங்கியிருந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஒரு தரப்பு மோதலில் ஈடுபட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காவல்துறை தடியடி நடத்தியபோது அதில் மாணவ, மாணவிகளும் சிக்கிக் கொண்டனர். காவல்துறையினர் சிறிது நேரம் போராடித்தான் கூட்டத்தை கலைக்க முடிந்தது. இந்த திருவிழா பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே தான் நடைபெறும். கடந்த வருடம் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவின் போது பாமக - விசிக கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
பாமகவினர் மீது தடியடி
இதனால் இந்த வருட மயானக் கொள்ளை திருவிழாவில் கட்சிக் கொடி பயன்படுத்த காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். ராமதாஸ் இல்லம் அருகிலேயும் நடனமாட காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். காவல்துறையின் தடையை மீறி பாமகவினர் ராமதாஸ் இல்லம் அருகே நடனமாட முயற்சித்தார்கள். தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை தடுத்துள்ளனர்.
காவல்துறையினர் எச்சரித்தும் பாமகவினர் கேட்காமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக அவர்கள் செயல்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் காயமடைந்தவர்கள் திண்டிவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முன்விரோதம் காரணமாக மோதிக் கொண்ட இளைஞர்கள், கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க தெரு முழுவதும் பெப்பர் ஸ்பிரே அடித்ததால் பொதுமக்கள், போலீஸார் அவதியடைந்தனர். 3 பேரை கைது செய்த போலீஸார் பலரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications