அமைச்சர் பொன்முடி மகனுக்கு திமுக செயற்குழு உறுப்பினர் பதவி! விழுப்புரம் மத்திய மாவட்ட மத்தியஸ்தம்!
விழுப்புரம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி.க்கு திமுகவில் செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமைச்சர் பொன்முடியின் வலது கரம் என விழுப்புரம் மாவட்ட திமுகவினரால் அழைக்கப்படும் புகழேந்திக்கு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து வந்து திமுகவில் இணைந்த லட்சுமணன் எம்.எல்.ஏ. விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு முயற்சித்த நிலையில் அதற்கு ஆரம்பத்திலேயே அணை போட்டுவிட்டார் அமைச்சர் பொன்முடி.

அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்ட திமுகவை பொறுத்தவரை வடக்கு, மத்திய என இரண்டாக பிரிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த கட்சியினர் முன் நிற்பது அமைச்சர் பொன்முடியின் முகம் மட்டுமே. விழுப்புரம் என்றாலே அமைச்சர் பொன்முடி என்பது தான் திமுக, அதிமுக உட்பட சகல அரசியல் கட்சியினருக்கும் முன் வந்து நிற்கும் முகமாகும். இந்நிலையில் அவர் தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக இருப்பினும் கூட, மாவட்ட அரசியலையே அதிகம் விரும்புகிறார்.

விழுப்புரம் மாவட்டம்
இதனால் தான் தாம் வகித்த விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியை தனது வலதுகரமாக திகழும் தீவிர ஆதரவாளர் புகழேந்தி வசம் கொடுத்து திரைமறைவில் நிர்வகித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தை எதிர்பார்த்து லட்சுமணன் எம்.எல்.ஏ. உட்பட இன்னும் ஓரிருவர் காய் நகர்த்தினர். ஆனால் அமைச்சர் பொன்முடியின் அன்புக் கட்டளையை ஏற்று தங்கள் முயற்சிகளை கைவிட்டனர்.

தலைமை செயற்குழு
தற்போது திமுக தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணிக்கு தலைமை செயற்குழு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த மாவட்டச் செயலாளர் தேர்தலில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரம் வடக்கு
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடிக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பினும் கூட கட்சிப் பணி என்று வந்துவிட்டால் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications