ஃப்ரீசர் பாக்ஸை தொட்டு அழுத தம்பி.. திடீரென அலறல்... காப்பாற்ற முயன்ற பெண்கள் மீது பாய்ந்த மின்சாரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சாத்தனூரில் துக்க வீட்டில் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதால் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இறந்தவர்கள் உடலை வைக்க பயன்படும் Freezer Box சில நேரங்களில் மின் கசிவு காரணமாக விபத்துகளை ஏற்படுத்துகின்றன.. கடந்த செப்டம்ர் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 15க்கும் மேற்பட்ட உறவினர்கள், உடலை வைத்திருந்த Freezer Box-ல் இருந்து மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பட்டனூர் கிராமத்தில் பள்ளி மாணவி பெற்றோர் திட்டியதால் உயிரை மாய்த்து கொண்டார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடல் ஃபிரீஸர் பாக்ஸில் வைக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் அதன் மீது கை வைத்து கதறி அழுதனர். சிலர் சாய்ந்து கொண்டும் அழுதனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் தாக்கி 15 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அதேபோன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது..
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூரில் தேவா என்பவரது உடல் வைக்கப்பட்ட ஃபிரீஸர் பாக்ஸை அவரது தம்பி பகவான் தொட்டு அழுத போது, மின்சாரம் தாக்கி உள்ளது. அப்போது அவரது அருகில் இருந்த பெண்கள் அவரை காப்பாற்ற சென்ற போது அவர்களது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
காயம் அடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. விழுப்புரம் மாவட்டம் சாத்தனூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வீட்டில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications