விஜய் காலடியில் வைகோ! அறிவாலய திண்ணையில் கமல்! கல்லறையில் தமாகா! நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: மதிமுக தொடங்கிய வைகோ இன்று எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார், விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவை அவரது மனைவி திமுகவிற்கு குத்தகைக்கு விட்டுள்ளார் என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் மேலும் பேசுகையில் மதிமுக தொடங்கிய வைகோ இன்று எங்கள் தலைவர் விஜய் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார். தமாகா என்ற கட்சி இன்று கல்லறைக்கு போய்விட்டது.

Nanjil Sampath criticises MDMK Vaiko

விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவை அவரது மனைவி திமுகவிற்கு குத்தகை விட்டுள்ளார். அரசியல் மாற்றம் தருவதாக மக்கள் நீதி மய்யம் தொடங்கிய கமல்ஹாசன், தனது டார்ச் லைட்டை அறிவாலயத்தில் தேடிக் கொண்டிருக்கிறார் என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஆட்சி மாற்றமும் ஒரு அரசியல் மாற்றமும் வேண்டும் என்பது தமிழக மக்களின் கனவு. 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி ஒரு அரசியல் மாற்றத்திற்கு அகரம் எழுதினார் வைகோ. ஆனால் அவராலேயே அதை செய்ய முடியவில்லை.

இன்று அவரே எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடக்கிறார். ஒரு அரசியல் மாற்றத்தை செய்வதற்காகத்தான் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார். ஆனால் இன்று அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அந்த கட்சி பாஜகவுடன் இணைந்ததால் தற்போது கல்லறைக்குள் போய்விட்டது.

ஒரு அரசியல் மாற்றத்திற்காக விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கையை பெற்ற விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அவருடைய மனைவி பிரேமலதா அந்த கட்சியை 5 ஆண்டுகளுக்கு திமுகவுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டார்.

அது போல் கமல்ஹாசன், திமுகவின் மீது வெறுப்பை கக்கி, டிவியை உடைத்து மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார். இப்போது அந்த கமல் எம்எல்ஏவாக கூட முடியாமல் அவர் கையில் இருந்த டார்ச்லைட்டை அறிவாலயத்தின் திண்ணையில் தேடி கொண்டிருக்கிறார். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுகவில் பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத், வைகோ வாரிசு அரசியலை கண்டித்து வெளியேறிய போது நாஞ்சில் சம்பத்தும் வெளியேறினார். வைகோ தொடங்கிய மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார்.

சிறந்த பேச்சாளரான இவர் வைகோவுக்கு இணையான பேச்சாற்றலை பெற்றவர். எனினும் வைகோவுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அங்கும் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவியை வழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு இன்னோவா காரையும் பரிசளித்தார்.

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாஞ்சில் சம்பத்தின் பதவியை ஜெயலலிதா பறித்தார். இதையடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். மேலும் தினகரன் தொடங்கிய அமமுகவில் திராவிடம், அண்ணா ஆகிய பெயர்கள் இல்லை என கூறி அங்கிருந்தும் வெளியேறினார். பிறகு அரசியலை விட்டு விலகுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த நாஞ்சில் சம்பத், தன்னை அவமதிப்பதாக கூறி தவெகவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். நாஞ்சில் சம்பத் கடந்த 2009ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது வைகோதான் அவருக்காக வாதாடினார். அப்படிப்பட்ட வைகோவை இன்று விஜய் காலடியில் கிடப்பதாக நாஞ்சில் சம்பத் விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+