அன்புமணி பாமகவில் இல்லை.. ஜிகே மணியை நீக்கும் அதிகாரமே கிடையாது.. பாமக எம்எல்ஏ அருள் ஒரே போடு!
விழுப்புரம்: பாமகவில் இருந்து கெளரவ தலைவர் ஜிகே மணியை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். அன்புமணி பாமகவிலேயே இல்லை என்று கூறிய அருள், கட்சி எங்களுக்கே சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துவிட்ட நிலையில், பாமக தங்களுக்கே சொந்தம் என்று இரு தரப்பும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இவர்களின் மோதல் டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தற்போது மாம்பழ சின்னத்தை கைப்பற்றும் நோக்கில் இரு தரப்பும் செயல்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் ராமதாஸ் தரப்பு பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜிகே மணி மற்றும் பாமக எம்எல்ஏ அருள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிராக ஜிகே மணி செயல்படுவதாக கூறி அன்புமணி தரப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் ஜிகே மணி இந்த நோட்டீஸை கண்டுகொள்ளவில்லை. அதற்கு விளக்கம் அளிக்காத சூழலில், ஜிகே மணி பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்துள்ளார். பாமகவினர் அவருடன் எந்த தொடர்பிலும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். பாமகவின் கெளரவத் தலைவர் ஜிகே மணியை நீக்கி அன்புமணி உத்தரவிட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.
இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவினர் அன்புமணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் பேசுகையில், பாமகவிலேயே இல்லாத அன்புமணி, கெளரவ தலைவர் ஜிகே மணியை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. பாமக எங்களுக்கே சொந்தம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அருள் கருத்து அன்புமணி தரப்பு பாமகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தேர்தல் ஆணையம் தரப்பில் பாமக தலைவர் அன்புமணி என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை புரிந்து கொள்ள மறுப்பதாகவும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Summary
PMK rift: Anbumani is not even in PMK and he doesn't have any rights to remove GK Mani says PMK MLA Arul












Click it and Unblock the Notifications