கிச்சனுக்குள் இழுத்து சென்று.. அரிவாள்மனையால் அப்பாவை வெட்டி கொன்ற மகள்.. விக்கித்த விழுப்புரம்

கிச்சனுக்குள் அப்பாவை இழுத்து கொண்டு போய் கொலை செய்த மகள் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கிச்சனுக்குள் பூசாரியை இழுத்து சென்று, அரிவாள்மனை, கத்தியால் அவரது தலையை தனியாகவும், உடலை தனியாகவும் வெட்டி எடுத்துவிட்டனர்.. இப்படி செய்தது பூசாரியின் மகளும், மனைவியும்தான்.. இந்த சம்பவத்தினால் விழுப்புரமே அதிர்ந்து கிடக்கிறது!

விழுப்புரம் அருகே உள்ள வடவாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன்... இவருக்கு 45 வயதாகிறது.. சின்னக்கள்ளிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தவர்.

priest murdered by wife, and daughter near villupuram

கடந்த 11-ந் தேதி நடுராத்திரி இவரை யாரோ கொன்று விட்டனர்.. பெட்ரூமில் படுத்து கிடந்தவர், கொஞ்ச நேரத்தில் கிச்சனில் சடலமாக கிடந்தார்.. இதுகுறித்து வளவனூர் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் யார் யார் மேலேயோ சந்தேகம் எழுந்த நிலையில், கடைசியில் பூசாரியின் மனைவியும், மகளும் சேர்ந்தே இந்த கொலையை செய்தது தெரியவந்தது. தனசேகரனுக்கு சத்யா என்ற மகள் இருக்கிறார்.. குமார் என்பவருடன் மகளுக்கு 2017-ம் ஆண்டில் கல்யாணம் செய்து வைத்தார் தனசேகரன்.. குமார் ஒரு கட்டிட தொழிலாளி.. மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணத்தை சேர்ந்தவர்.

ஆனால் புது மண தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருந்தது.. இந்நிலையில்தான் குமாரின் நண்பரான முருகவேல் என்பவர் அந்த குடும்பத்துக்கு அறிமுகமானார்.. இவர் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர்.. 35 வயதாகிறது.. முருகவேலும் ஒரு கட்டிட தொழிலாளி.. அதனால் வேலை விஷயமாக அடிக்கடி பேசுவதற்காக குமார் வீட்டிற்கு வந்து போயுள்ளார்.. அப்போதுதான் முருகவேலுக்கும், சத்யாவுக்கும் லவ் வந்துவிட்டது.

இதனிடையே சத்யா கர்ப்பமாகிவிடவும், பிரசவத்துக்கு அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.. குழந்தையும் பிறந்துவிட்டது.. மறுபடியும் மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து செல்ல குமார், மாமியார் வீட்டிற்கு வந்தார்.. ஆனால், சத்யா கணவனுடன் செல்ல விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார்.

இதனால் குழப்பம், கவலையுடன் குமார் திரும்பி சென்றுவிட்டார்.. இது சத்யாவுக்கு இன்னும் சாக்காகிவிட்டது.. கள்ளக்காதலன் முருகவேல், அடிக்கடி சத்யாவை சென்று சந்தித்து பேசி வந்துள்ளார்.. இந்த விஷயம் பூசாரி தனசேகரனுக்கு தெரியவந்தது.. மகள் இப்படி வழிதவறி நடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மகளை கண்டித்தார்.. ஆனாலும் சத்யா அவர் பேச்சை கேட்கவில்லை.

இதனால் அக்கம்பக்கத்தில் மானம் போகிறது என்று மனம் உடைந்த தந்தை, அடிக்கடி மகள் சத்யாவை கண்டித்தும் அடித்தும் வந்தார்.. ஆனால் சத்யாவிற்கு அவரது அம்மா முழு சப்போர்ட் தந்தார்.. மகளை அவர் கண்டிக்கவே இல்லை.. கணவனைதான் திட்டி வந்தார். ஒருகட்டத்தில் தாயும், மகளும் சேர்ந்து தனசேகரனை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி சம்பவத்தன்று போதையில் படுத்து கிடந்த தனசேகரனை, மனைவி ராஜேஸ்வரியும், மகள் சத்யாவும் கிச்சனுக்கு இழுத்து சென்று அரிவாள்மனை, கத்தியால் வெட்டிக்கொலை செய்தனர்... உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிந்தபிறகு, கள்ளக்காதலனுக்கு போன் செய்து வரவழைத்தார் சத்யா.

அதற்குள் அப்பாவின் ரத்தக்கறை படிந்த டிரஸ்ஸை அவிழ்த்துவிட்டார்.. பிறகு, "எலியோ, பூனையோ இப்படி கடிச்சு குதறி கொன்னுடுச்சே" என்று தாயும்-மகளும் ஒப்பாரி வைத்துள்ளனர். இப்போது ராஜேஸ்வரி, சத்யா, முருகவேல் 3 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+