பாமக யாருக்கு? தேவைனா அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும்.. கொந்தளித்த ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அன்புமணிக்கு தேவையென்றால் தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய ராமதாஸ், என் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. தற்போது பாமக யாருக்கு என்ற போட்டியில் இருவரும் இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பு பாமகவை அங்கீகரித்துள்ள சூழலில், ராமதாஸ் தரப்பில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இதனிடையே மாம்பழ சின்னத்தை கைப்பற்ற அடுத்தக்கட்ட நடவடிக்கையை இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Ramadoss Anbumani Ramadoss PMK

இதனால் மாம்பழ சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தல் ஆணையத்தை எதிர்த்துதான் நாங்கள் வழக்கு போட்டோம். ஆனால் அன்புமணி தரப்பு தாமாக முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வாதிட்டனர். நீதிமன்றம் 36 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

சொந்த தந்தையையே எதிர்க்கும் இப்படியொரு தலைவர் தமிழ்நாட்டில் பிறந்துள்ளாரே என்று பேச தொடங்கியுள்ளனர். டெல்லியில் நாங்கள் மிகப்பெரிய போராடத்தை நடத்தியுள்ளோம். பாமகவை நான் உருவாக்கினேன். கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்த கொண்டாடவோ வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும்.

என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. புதிய கட்சியை தொடங்கியோ அல்லது வேறு ஒரு கட்சியிலோ இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளுஇம் அன்புமணி பொய் பேசி கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு உனக்கு எதற்கு கட்சி என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி தரப்பில் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ராமதாஸ் தரப்பு கட்சியை கைப்பற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், பாமகவின் இரு பெரிய தலைவர்களும் மோதி வருவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உருவாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+