வதந்திகளை நம்பாதீங்க.. பாமக பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடக்கும்.. ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு!
விழுப்புரம்: பாமகவின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை திட்டமிட்டபடி எனது தலைமையில் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பொதுக்குழு ரத்து செய்யப்பட்டதாக பரவும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ள ராமதாஸ், பொதுக்குழு நிர்வாகிகள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருடன் இருப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருவதால், யாருடன் நிற்பது என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக அன்புமணிக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இதனிடையே நேற்று மாலை தைலாபுரத்திற்கு அன்புமணி தனது குடும்பத்தினருடன் சென்றார். தாய் சரஸ்வதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
அப்போது சரஸ்வதியின் ஒரு பக்கம் ராமதாஸும், மறுபக்கம் அன்புமணியும் நின்று கொண்டிருந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராமதாஸ் நாளை பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் வலுத்து வந்தது.
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பில், பாமகவின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது.
அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழு நிர்வாகிகள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக ராமதாஸை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications