10 நாட்களுக்கு ஆக்டிங் முதலமைச்சராகும் வாய்ப்பு கூட நமக்கு கிடைக்கல! ஊமை ஜனங்கள்! ராமதாஸ் ஆதங்கம்!
விழுப்புரம்: தமிழ்நாட்டில் ஒரு 10 நாட்களுக்கு ஆக்டிங் முதலமைச்சராகும் வாய்ப்பு கூட நமக்கு கிடைக்கவில்லையே என பாமக நிறுவனர் ராமதாஸ் மிகுந்த வேதனையோடு தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
ஊமை ஜனங்களாக இருக்கிறார்கள் என தெரிவித்த ராமதாஸ், பாமக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியவில்லையே என்ற அதிருப்தியை ஓபனாக வெளிப்படுத்தினார். இது வரை இது போன்ற மனக்குமுறல்களை பாமக பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டுமே ராமதாஸ் கொட்டி வந்தார்.

வன்னியர் சங்கத்தின் 44-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் ராமதாஸ். அப்போது அவரிடம் வழக்கமான் உற்சாகம் தென்படவில்லை. இதற்கு காரணம் வன்னியர் சங்கம் அமைப்பு வலிமையாக இருந்து ஒரு ஆக்டிங் முதல்வராக கூட நம்மால் வர முடியவில்லையே என்பது தான்.
தமிழக நிழல் நிதி அறிக்கை, வேளாண் நிழல் நிதி அறிக்கை, ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களுடன் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு என பாமக பலபடிகளில் அரசியல் செய்து வருகிறது. அதேபோல், மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்ளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கமாகவும் பாமக திகழ்கிறது.
வடதமிழ்நாட்டில் கணிசமான வாக்கு வங்கிகளையும், கட்சியின் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது. இப்படி பல பெருமைகளும், சிறப்புகளும் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியால் அதிகாரத்துக்கு வர முடியவில்லையே என்ற ஆதங்கம் ராமதாசுக்கு இருந்து வருகிறது. அதைத் தான் வன்னியர் சங்க கொடியேற்று விழாவில் கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications