செஞ்சி அருகே கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள் பட்டை தீட்டிய இடம் கண்டுபிடிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்களைப் பட்டை தீட்டிய இடம் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம், சரவணன் மற்றும் உதயராஜா ஆகியோர் இணைந்து பாக்கம் மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி மாணவர் திரு நிதீஷ் குமார் அவர்கள் நாராயணபுரம் - செத்தவரை இடையே உள்ள ஒரு சிறிய மலைக் குன்றில் ஏதோ கால்தடங்கள் போன்ற அமைப்பு இருப்பதாகத் தந்த தகவலின் பேரில் அவ்விடத்திற்குச் சென்றனர்.
அவ்வூர் ஏரியை ஒட்டி அமைந்துள்ள 100 அடி உயரமுள்ள சிறு குன்றின் மீது ஏறியபோது அதன் மேற்பரப்பு மிகவும் தட்டையாகப் பரந்து விரிந்து காணப்பட்டது. அக்குன்றின் மையப்பகுதியில் இயற்கையான சுனை ஒன்று காணப்படுகிறது.

சுனை
சுனையைச் சுற்றி ஆங்காங்கே சிறு குழிகள் தென்பட்டது. மேலும் அதனை ஆய்வு செய்ததில் கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களைக் கூர்மை அல்லது பட்டை தீட்டிய இடம் எனத் தெரியவந்தது. இக்குழிகள் யாவும் சிறு தொகுப்புகளாக இக்குன்றின் மீது ஆங்காங்கே காணப்படுகிறது. இச்சிறு குன்றானது செத்தவரை , பாக்கம் மற்றும் தடாகம் மலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

ஆயுதங்கள்
கற்கால மனிதர்கள் இது போன்று ஆயுதங்களைத் தீட்டும் பொழுது நீர் தேவைப்படும் என்பதால் நீர் ஊற்றை ஓட்டிய இடங்களைத் தான் தேர்வு செய்வர். இக்குன்றின் மீது இயற்கையாக அமைந்த வற்றாத நீர் ஊற்று இருப்பதாலும் , குன்றின் மீது சமவெளி பரப்பு அதிகம் இருப்பதாலும் இப்பகுதியில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இவ்விடத்தை தங்கள் யாவும் சிறு தொகுப்புகளாக இக்குன்றின் மீது ஆங்காங்கே காணப்படுகிறது.

பாக்கம்
இச்சிறு குன்றானது செத்தவரை , பாக்கம் மற்றும் தடாகம் மலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. கற்கால மனிதர்கள் இது போன்று ஆயுதங்களைத் தீட்டும் பொழுது நீர் தேவைப்படும் என்பதால் நீர் ஊற்றை ஓட்டிய இடங்களைத் தான் தேர்வு செய்வர். இக்குன்றின் மீது இயற்கையாக அமைந்த வற்றாத நீர் ஊற்று இருப்பதாலும் , குன்றின் மீது சமவெளி பரப்பு அதிகம் இருப்பதாலும் இப்பகுதியில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இவ்விடத்தை தங்கள் மேலும் இக்குன்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்கால ஆயுதங்களும் கண்டறியப்பட்டது. அவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். இதைத் தவிர்த்து ஊரில் ஆங்காங்கே நிலத்தில் இது போன்ற புதிய கற்கால ஆயுதங்கள் கண்டுள்ளதாக அவ்வூரைச் சேர்ந்த பரத் தெரிவித்தார்.

உபயோகித்த கருவிகள்
பழைய கற்கால மனிதர்கள் உபயோகித்த கருவிகள் யாவும் சொரசொரப்புடன் காட்சி அளிக்கும். புதிய கற்கால மனிதர்கள் அதனைச் சீர்செய்து வழவழப்பு தன்மையுடன் மாற்றி உபயோகிக்கத் தொடங்கினர். அதுமட்டுமில்லாமல் நாடோடியாகவும் வேட்டைச் சமூகமாகவும் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் புதிய கற்காலத்தில் ஓரிடத்தில் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கினர்.

மலையை ஒட்டிய பகுதி
இவ்விடத்தில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான குழிகள் மற்றும் ஆயுதங்களை வைத்துப் பார்க்கையில் இவ்விடத்தை ஒட்டிய மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் மிகப் பெரிய இனக்குழு வாழ்ந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. எனவே இக்குழிகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதலாம். இக்குன்றின் மீது உள்ள குழிகளை இவ்வூர் மக்கள் "காட்டேரியின் கால்தடங்கள்" என்று அழைத்து வருகின்றனர்.

வேதனை
மேலும் குன்றில் ஆங்காங்கே பாறைகள் சிதைக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இப்பகுதியைத் தமிழக தொல்லியல் துறை முறைப்படி ஆவணம் செய்து இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க முன்வர வேண்டும் என வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications