சொந்த ஊரிலேயே அமைச்சர் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு! ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே சொந்த தொகுதி மக்களே அமைச்சர் பொன்முடியை தடுத்து நிறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராகவும், அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும் திகழ்பவர் பொன்முடி.
இப்படி செல்வாக்குள்ள அமைச்சருக்கே சொந்த தொகுதியில் இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியிருப்பது தான், கட்சியின் கடைக்கோடி தொண்டர் முதல் ஆட்சி மேலிடம் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணய் நல்லூர் அருகே டி.எடையூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு அருண் என்ற கல்லூரி மாணவர் அதே ஊரை சேர்ந்த சக இளைஞர்கள் 4 பேரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொந்தளித்த கிராம மக்கள் கஞ்சா புழக்கமே இத்தகைய கொலை நிகழ்வுக்கு காரணம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொந்த தொகுதி
விழுப்புரம் மாவட்ட அமைச்சர் என்கிற முறையிலும் சொந்த தொகுதிக்குள் வரும் கிராமம் என்பதாலும் அமைச்சர் பொன்முடி டி.எடையூருக்கு நேரில் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞர் அருண் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த முயன்றார். அப்போது ஆவேசமாக அமைச்சர் பொன்முடியை சூழ்ந்துகொண்ட கிராமமக்கள், தேர்தலின் போது ஓட்டுக்கேட்க வந்ததோடு சரி அதற்கு பிறகு தங்கள் ஊர் பக்கமே ஏன் வரவில்லை என சரமாரியாக வினவினர்.

பொறுமை காத்த பொன்முடி
மேலும், இளைஞர் அருண் கொலைக்கு கஞ்சா ஆசாமிகள் தான் காரணம் என முறையிட்டனர். சொந்த தொகுதியை சேர்ந்த மக்கள் என்பதால் தனது கோபத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு மிகவும் பொறுமையாக நிகழ்வை கையாண்டார் அமைச்சர் பொன்முடி. சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அருண் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டார் பொன்முடி.

திமுக சார்பில் நிதி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் உயிரிழந்த அருண் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மேலும் அருண் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதேபோல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications