நீங்க வாங்க.. சட்டென அழைத்த முதல்வர்.. வியந்து பார்த்த பட்டியல் இன பெண்! விழுப்புரத்தில் நெகிழ்ச்சி!
விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் சமத்துவபுரத்தை திறந்த போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் சென்ற முதல்வர் இன்று அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு அங்கு இருக்கும் சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மக்களிடம் பேசினார்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சமத்துவபுரத்தை திறக்கும் முன் அங்கிருந்த மக்களிடம் பேசினார். இந்த சமத்துவபுரம் கட்டி 10 வருடம் ஆகிறது. ஆனால் இடையில் அதிமுக ஆட்சியில் இந்த சமத்துவபுரம் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 10 வருடமாக கிடப்பில் போடப்பட்டு இருந்த சமத்துவபுரத்தை மீண்டும் சரி செய்து, அதில் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு கடைசியில் இன்று திறந்து உள்ளனர்.

ஸ்டாலின் சமத்துவபுரம்
அங்கிருந்த மக்களிடம் முதல்வர் ஸ்டாலின்.. அவர்களின் வாழ்க்கை சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். சமத்துவபுரத்தில் நீங்கள் இன்று குடியேறிவிடலாம். இனி கவலையின்றி நீங்கள் இருக்கலாம் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். இந்த நிலையில் அங்கு சமத்துவபுரத்தை திறக்க சென்ற முதல்வர் ஸ்டாலின், கூட்டத்தில் இருந்த பெண் ஒருவரை.. நீங்க வாங்க என்றுஅழைத்து ரிப்பனை வெட்டும்படி கூறினார்.

ரிப்பன் வெட்டிய பெண்
இதையடுத்து அந்த பெண் வியந்து போய்.. முகம் முழுக்க சிரிப்போடு.. யோசித்தபடியே முதல்வர் ஸ்டாலினை நோக்கி நடந்து வந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அந்த பெண்ணின் கையில் கத்திரிக்கோலை கொடுத்து.. நீங்களே இதை திறந்து வையுங்கள் என்று கூறினார். இதையடுத்து அந்த பெண் சமத்துபுரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

வியந்து போன பெண்
சமத்துவபுரத்தை திறந்து வைத்த அந்த பெண் பெயர் கம்சலா. இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். முதல்வர் ஸ்டாலின் பட்டியல் இன பெண்ணை ரிப்பன் வெட்டி திறக்கச் செய்தது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் உள்ளே இருக்கும் வீடுகளை திறக்க சென்ற போதும் அங்கிருந்த பெண்களை வைத்து முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் கட் செய்ய சொன்னார்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications