குடிமகன்களுக்கு காலையில் ஷாக் செய்தி..டாஸ்மாக்-க்கு 4 நாட்கள் லீவு விட்டுட்டாங்க! இது தான் காரணமாம்!
விழுப்புரம்: பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் தேர்தலை ஒட்டி நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்போடுதேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் எம்எல்ஏ மரணமடைந்ததால் மீண்டும் திமுகவே அந்த தொகுதியில் போட்டியிடுகிறது.

திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருக்கிறது அதிமுக.
பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ். அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளளார். இதேபோல தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயாவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதை அடுத்து விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் கால இடைவெளியே இருக்கும் நிலையில் 3 நாட்களில் அதாவது 8ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தலை ஒட்டி நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வரும் 10ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்காக 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தான் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக் கூடங்கள், தனியார் பார்களை மூட உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியரான பழனி.
வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரையிலும், அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூலை 13-ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட விழுப்புரம் ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் 10.07.2024 அன்று நடைபெறுவதையொட்டி 08.07.2024 மற்றும் 10.07.2024 ஆகிய 3 தினங்கள் மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் [அனைத்து FL2 to FL11 (FL6 தவிர)] மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி உத்தரவிட்டுள்ளார்." என கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications