Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டியை தட்டித் தூக்கிய திமுக! மெகா வெற்றியைப் பெற்ற அன்னியூர் சிவா! கொண்டாட்டத்தில் திமுக.!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெருவெற்றி பெற்றுள்ளார். அவர் 67 ஆயிரத்து 440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பாமக வேட்பாளரை தவிர அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலியானது.


விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

vikravandi by election 2024 vikravandi by election results election commission 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அந்த கட்சியின் விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

கடந்த 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், சுமார் 82.9 சதவீத வாக்குகளே பதிவாகின. 176 வாக்குச்சாவடிகளில் 42 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகவும் 3 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டன. இதனயடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

மொத்தமுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது. 276 கட்டுப்பாட்டுக் கருவிகள், 276 விவிபேட் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தபட்டன. மொத்தம் 1135 தேர்தல் பணியாளர்களும் 3000 போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மேலும் 3000த்திற்கும் மேற்பட்ட மத்திய போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப் பதிவு நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில், ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாக பதிவாகி இருந்தது. மொத்தம் 95 ஆயிரத்து 536 ஆண்களும், 99 ஆயிரத்து 944 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர் வாக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இதை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் கருவிகளும் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் ஸ்டராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

இதற்காக 15 மேஜைகள் அமைக்கப்பட்டு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரே சுற்றாக தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இதற்காக இரண்டு மேஜைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 14 மேஜைகளில் 19 சுற்றுகளாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பலத்த சோதனைகளுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தபால் வாக்கு எண்ணப்படும் போதே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் ஏறக்குறைய 3 3 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலை பெற்ற அவர், 1,23,688 வாக்குகள் பெற்று பெற்று பாமக வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,248 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகளும் பெற்றனர். இதில் சி.அன்புமணியை தவிர போட்டியிட்ட நாம் தமிழர் அபிநயா உள்ளிட்ட அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+