அதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு!

தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் நிலவவில்லை, அதிமுக தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் நிலவவில்லை, அதிமுக தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி வெற்றிபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார்.

இதில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் பேசினார். அதிமுக கடந்த 2 வருடமாக கடந்த வந்த பாதையை அவர் எடுத்துக் கூறினார்.

ஜெயலலிதா எப்படி

ஜெயலலிதா எப்படி

முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறினார்கள். ஆனால் இடைத்தேர்தல் வெற்றி அதை பொய் என்று நிரூபித்துவிட்டது. தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது.

தலைமை வெற்றிடம்

தலைமை வெற்றிடம்

தலைமை வெற்றிடம் என்று பொய்யான வதந்தியை பரப்பி வருகிறார்கள். ஆனால் பொய்யான வதந்திகளை மக்கள் ஓரம்கட்டியுள்ளனர். எங்கே வெற்றிடம் இருக்கிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம். அதிமுகதான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது.

ஸ்டாலின் கொடுத்து வைக்கவில்லை

ஸ்டாலின் கொடுத்து வைக்கவில்லை

முதல்வராக ஸ்டாலினுக்கு கொடுத்து வைக்கவில்லை. நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே முதல்வர் பதவி கிடைக்கும். ஸ்டாலின் கடைசி வரையில் கனவு மட்டும்தான் காண முடியும், முதல்வராகவே முடியாது. இரவு பகலாக உழைத்ததால் மட்டுமே இரு தொகுதியிலும் வெற்றி அதிமுக வசமானது.

 மக்களை தூண்டிவிட்டார்

மக்களை தூண்டிவிட்டார்

ஸ்டாலின் மக்களை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய நினைத்தார். அரசை கவிழ்க்க அவர் படாதபாடு பட்டார். ஆனால் அவரின் திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. மக்களை அவரால் ஏமாற்ற முடியாது, என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+