விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ் மாடலா ? திராவிட மாடலா? பொன்முடியுடன் விவாதத்திற்கு தயார்.. அண்ணாமலை அறிவிப்பு!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: வரலாறு குறித்து விவாதிக்க அமைச்சர் பொன்முடி விடுத்த சவாலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதேபோல் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு ரெய்டு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் தொண்டர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை குறித்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என கூச்சமே இல்லாமல் பொய் பேசும் அண்ணாமலை: பீட்டர் அல்போன்ஸ் பொளேர்மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என கூச்சமே இல்லாமல் பொய் பேசும் அண்ணாமலை: பீட்டர் அல்போன்ஸ் பொளேர்

அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை பேட்டி

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், மத்திய அரசின் சாதனை விளக்கக் கண்காட்சியை பொதுமக்கள் வந்து காண வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் 72 ஆண்டுகள் வாழ்க்கை வரலாறு, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதனை பொதுமக்கள் வந்து கண்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆளுநர் பற்றி கருத்து

ஆளுநர் பற்றி கருத்து

தொடர்ந்து தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஆளுநரின் கருத்து குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் என்ன சொல்லியிருந்தாலும் அது ஆளுநரின் கருத்து. கடந்த 15 மாதங்களில் திமுக அரசு தமிழக மக்களிடம் ஊழல் அரசு என்று பெயர் எடுத்துள்ளது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை சீர் குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

சவாலை ஏற்ற அண்ணாமலை

சவாலை ஏற்ற அண்ணாமலை

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வரலாறு குறித்து விவாதிக்க தயாரா என்று விடுத்த சவால் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாஜக எப்போதும் தமிழ் மாடலா, திராவிட மாடலா என்பது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். குறிப்பாக திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி விவாதிக்க எப்போதும் தயாராக உள்ளோம்.

திமுக தலைவர் தயாரா?

திமுக தலைவர் தயாரா?

70 ஆண்டுகளில் திமுகவின் சாதனை, தேசிய மாடலா, திராவிட மாடலா என்பது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல் பாஜக தரப்பில் முன்வைக்கக் கூடிய தமிழ் மாடலா என்பது பற்றியும் விவாதிக்க தயார்.அதேபோல் அமைச்சர் பொன்முடி கட்சித் தலைவர் அல்ல. அதனால் பொன்முடி, நேரத்தையும் காலத்தையும் குறித்து சொன்னால், பாஜக மாநில துணைத் தலைவர் ஒருவர் தயாராக வருவார். அதேபோல் திமுக தலைவர் விவாதத்திற்கு அழைத்தால், நான் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu BJP leader Annamalai has responded to Minister Ponmudi's challenge to discuss history about Dravidian Model.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X