பேசுவதற்கு முன்பு டக்கென மேடையை விட்டு இறங்கிச் சென்ற விஜய்.. தாய், தந்தையை கட்டியணைத்து நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்பு, மேடையில் இருந்து இறங்கிச் சென்று தனது தாய், தந்தையிடம் ஆசி பெற்றார் தவெக தலைவர் விஜய். மாநாட்டு மேடையின் முன்வரிசையில் விஜய்யின் பெற்றோர் அமர்ந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெற்று வரும் நிலையில், தவெக கட்சி தலைவர் விஜய் 4 மணி அளவில் மேடைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் தொண்டர்கள் படைக்கு மத்தியில் ரேம்ப் வாக் செய்தார். அதனை தொடர்ந்து தவெக மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டு மறைந்த தலைவர்கள், மொழிப்போர் தியாகிகள், மன்னர்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விக்கிரவாண்டி மாநாட்டில் தவெகவின் கொள்கை பாடலை வெளியிட்டார். வெற்றி வெற்றி வாகை எனத் தொடங்கிய தவெக கட்சி கொள்கை பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த பாடலில் பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோர் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மதசார்பற்ற முறையில் தவெக செயல்படும் என்பதை அப்பாடல் மூலம் தவெக தலைவர் வெளிப்படுத்தி உள்ளார். பெரியாரின் சிந்தனைகள், சட்டமேதை அம்பேத்கர், மாபெரும் தலைவர் காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை முன்னிறுத்தி தவெக தலைவர் தனது கட்சியை வரும் காலங்களில் இயக்க உள்ளார் எனத் தெரிகிறது. தவெக கொள்கை பாடலில் தவெக தலைவர் விஜய் குரல் கொடுத்து பாடியும் உள்ளார்.

அதைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேச அழைக்கப்பட்டார். எழுந்து வந்த விஜய், மேடையில் இருந்து இறங்கிச் சென்று, முன்வரிசையில் அமர்ந்திருந்த தனது தாய் தந்தையரை கட்டித் தழுவி ஆசி பெற்றார்.

மேடைக்குச் சென்ற விஜய், “ஒரு குழந்தை முதல் முதலில் அம்மா என்று சொல்லும் போது ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க.. அது அம்மாவுக்கு தெரியாது ஆனா குழந்தைக்கும் தெரியாது ஆனால் அது பால்வாசம் மாறாத உணர்வுடன்..” எனத் தொடங்கிப் பேசினார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+