பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்.. தவெக மாநாட்டிற்காக 8 லட்சம் சிற்றுண்டி தொகுப்புகள் ரெடி!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக பிஸ்கெட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் அடங்கிய சிற்றுண்டி தொகுப்பை தவெகவினர் தயார் செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை பகுதியில் நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணி தொடங்கும் மாநாடு இரவு 8.45 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் தற்போதே வர தொடங்கி விட்டனர். சுமார் 5 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பாகர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

தவெக மாநாட்டில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மற்றவர்கள் நின்று கொண்டே மாநாட்டை பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு மேடையில் நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை அருகிலேயே பார்க்கும் வகையில் 800 மீட்டர் தூரத்துக்கு பிரத்தியேக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கு உணவு வழங்குவதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக உணவு ஏற்பாடு செய்து வழங்கும்போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்படலாம், உணவு மீதமாகும் சூழலும் ஏற்படக்கூடும் என்பதால் அந்தந்த தொகுதிகளின் பொறுப்பாளர்கள், சாப்பாட்டு விஷயத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

மாநாடு நடக்கும் பகுதியிலேயே உணவு வழங்கும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள உணவகங்களில் தவெக நிர்வாகிகள் சார்பில் பல்லாயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொண்டர்களுக்குக் கொடுப்பதற்காகச் சிற்றுண்டி மற்றும் தண்ணீர் பாட்டில்களை தவெகவினர் விறுவிறுப்பாகத் தயார் செய்து வருகிறார்கள். பிஸ்கெட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் அடங்கிய சிற்றுண்டி பைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட உள்ளன. சுமார் 8 லட்சம் சிற்றுண்டி கிட்கள் தொண்டர்களுக்காகத் தயாராகி உள்ளது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

வி. சாலை அருகே அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ஸ்நாக்ஸ் பேக் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று, சிற்றுண்டி பைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் இத்தகைய ஸ்நாக்ஸ் பேக்கிங் செய்வதற்கான பணிகள் நடந்துள்ளன.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உணவு வழங்கப்படாமல், அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது சாப்பிட, தண்ணீர் அருந்த இந்த சிற்றுண்டி வழங்கும் ஏற்பாட்டை செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+