Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிடம் மகன் துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கிறேனா.. ஆவேசமான வைகோ!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மகன் துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கிறேன் என்றும் பொய் செய்தியை பரப்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துத்துவ சக்திகள் தமிழ்நாட்டில் நுழைந்தால் இந்தி தான் இருக்கும் என்ற கூறிய வைகோ, பாஜக நுழையக் கூடாது என்பதற்காகவே திமுக கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே திமுக - மதிமுக இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான முத்து ரத்தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். கடந்த 8 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகளில் இருந்து வரும் நிர்வாகிகளை திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் சேர்க்கப்படவில்லை.

Vaiko Denies BJP Alliance Talks Slams False Claims on Ministerial Demand for Son

ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு 9 மாதங்கள் இருந்த போது, மதிமுகவின் முத்து ரத்தினம் திமுகவில் சேர்க்கப்பட்டது பேசுபொருளாகியது. இதன் காரணமாக வைகோ நேரடியாக அண்ணா அறிவாலயம் வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது இனி மதிமுகவில் இருந்து வரும் நிர்வாகிகளை திமுகவில் சேர்த்து கொள்ளக் கூடாது என்ற உத்தரவாதத்தை வைகோ பெற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேசி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியது விவாதமாகியது. அதிலும் ஏற்கனவே எங்களுடன் கூட்டணி வைத்த கட்சி என்றும் வெளிப்படையாக கூறி இருந்தார். இதன் மூலமாக மதிமுகவுடன் பாஜக பேசி வருவதாக பார்க்கப்படுகிறது. துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க பாஜக முன் வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல் வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு அளிக்கவும் பாஜக தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் துரை வைகோ மற்றும் வைகோ இருவரும் மறுத்து வந்தனர். இதனிடையே மல்லை சத்யா மீது வைகோ துரோகி பட்டம் சூட்டியதோடு, மதிமுகவில் இருந்து விலகியவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனால் திமுக - மதிமுக இடையிலான உறவு கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துரை வைகோ, திமுக கூட்டணியில் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தொடர்ச்சியாக பேசி வருகிறார். மதிமுக மாநிலக் கட்சி அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருக்கிறார். இதனால் திமுக - மதிமுக பிரிய அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் விழுப்புரத்தில் மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக நுழையக் கூடாது என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். பாஜகவுடன் பேசி வருகிறேன், மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கிறேன் என்று பொய் செய்தியை பரப்புகிறார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துத்துவ சக்திகள் தமிழ்நாட்டில் நுழைந்தால் இந்திதான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+