அரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்
Recommended Video
விழுப்புரம்: அரசு பள்ளியில் கணிணி வகுப்பறையில் விஜய்யின் நண்பன் படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விழுப்பரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்களின் வசதிக்காக கல்வித்துறை சார்பில் கரும்பலகையுடன் கணிணி திரைகள் (புரஜெக்டர்களும்) அமைக்கப்பட்டுள்ளளது.

மாணவர்களுக்கு பயன்
இதன் மூலம் மாணவர்களுக்கு ஆசியர்கள் பாடங்கள் தொடர்பான காட்சிகளை இணையதளம் வழியாக கணிணி திரையில் ஒளிபரப்பி கற்பித்து வருகிறார்கள். பாடம் குறித்த சந்தேகங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.

திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே சித்தேரிப்பட்டு என்ற ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சனிக்கிழமை அன்று கணிணி வகுப்பறையில் மாணவர்களுக்கு சினிமா காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

நேரில் விசாரணை
இதையடுத்து திருக்கோவிலூர் கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், சனிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணி அளவில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து விஜய் நடித்த நண்பன் படத்தின் திரைப்பட காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

கல்வி அலுவலர் அதிரடி
மேலும் அந்த பள்ளியில் பணிபுரியும் எட்வர்ட் விக்டர்பாபு என்ற இடை நிலை ஆசிரியர் தான் மாணவர்களுக்கு நண்பன் படத்தை ஒளிபரப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் எட்வர்ட் விக்டர்பாபுவை சஸ்பெண்ட் செய்து திருக்கோவிலூர் கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் உத்தரவிட்டார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம்












Click it and Unblock the Notifications