விக்கிரவாண்டி தொகுதிக்கு இப்படியொரு ராசியா? 13 ஆண்டுகளில் 5வது முறையாக MLAவை தேர்வு செய்யும் மக்கள்!
விழுப்புரம்: 13 ஆண்டுகளில் 5வது முறையாக சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய இருக்கின்றனர் விக்கிரவாண்டி வாக்காளர்கள். ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ ராதாமணி மறைவால் 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. தற்போது புகழேந்தி மறைவால் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
2007 ஆம் ஆண்டு தொகுதி மறு வரையறைக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட சட்டசபை தொகுதி விக்கிரவாண்டி. 2011 ஆம் ஆண்டு தான் விக்கிரவாண்டி தொகுதி முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தது. 13 ஆண்டுகளுக்குள் தற்போது ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரை விக்கிரவாண்டி வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். பொன்முடிக்கு நெருக்கமான புகழேந்தி, புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த முதல்வரின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த புகழேந்தி, அங்கு மயங்கி விழுந்தார். மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 93,730 வாக்குகளைப் பெற்று திமுகவுக்கு வெற்றிக்கனியைப் பறித்துத் தந்தார். திமுக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிட்டப்பட்டது. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களில் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அந்தவகையில் தற்போது இடைத்தேர்தலை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 முதல்: விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக கூட்டணியில் சிபிஐ (எம்) சார்பில் 2011 ஆர். ராமமூர்த்தி 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016ல் திமுக வேட்பாளர் ராதாமணி சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் காலமான நிலையில் 2019ல் அங்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 3 ஆண்டுகளில் அவர் காலமான நிலையில், அங்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பதவிக் காலத்திலேயே தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது திமுக.
புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டு 13 ஆண்டுகளே ஆகும் நிலையில், 5வது முறையாக தேர்தலைச் சந்திக்கிறது விக்கிரவாண்டி. இதுவரை விக்கிரவாண்டியில் 3 முறை சட்டசபை பொதுத்தேர்தலும், 1 முறை இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. தற்போது 2வது முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, 5 ஆண்டுகளுக்குள் 2 இடைத்தேர்தல் உட்பட இதோடு 3 தேர்தல் நடக்கிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications